Pandian Stores Season 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 மற்ற நாடகங்களை விட அப்பா மகன்களின் பாசத்தையும், பிள்ளைகளை எப்படி கண்டிப்புடன் வளர்க்க வேண்டும் என்று காட்டி வருகிறது. அந்த வகையில் தற்போது அனைவரது ஃபேவரிட் நாடகமாக இடம் பிடித்திருக்கிறது. ஆனால் மூர்த்தி இதில் ரொம்பவே கடுகடுவென்று கோபத்துடன் பேசும் அப்பாவாக இருக்கிறார்.
அதிலும் கதிர் என்ன பண்ணாலும் தப்பு என்றும், ஏதாவது ஒரு தவறு நடந்தால் அதற்கு கதிர் தான் காரணமாக இருப்பார் என்றும் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்கிறார். அந்த வகையில் பங்காளி வீட்டிற்கும் மூர்த்திக்கும் இடையில் நடந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறிவிட்டது. அதாவது மூர்த்தியை அவமானப்படுத்துவதற்காக அவர் யாருமில்லாத அனாதை என்றும் அப்பா அம்மா பெயர் கூட தெரியாது என்ற வார்த்தைகளால் தாக்கினார்கள்.
இதனால் அடுத்து எதுவுமே பேச முடியாமல் மூர்த்தி வாய் அடைத்துப் போய்விட்டார். ஆனால் நம்முடைய அப்பா தலை குனிந்து போய் நிற்கிறார் என்று இவருடைய கடைசி மகன் கதிர் அவர்களை எதிர்த்து அடிக்க போய்விட்டார். அதே மாதிரி அங்கு இருந்த சக்திவேல் மகனும் தகராறில் இறங்கி விட்டார்.
Also read: குணசேகரனுக்கு எதிராக எமனாக நிற்கும் தோழர்.. அப்பத்தாவிற்கு பதிலாக பலிகடாக சிக்கிய ஜீவானந்தம்
கடைசியில் இவர்கள் இருவருக்கும் கைகலப்பு முத்தி போய்விட்டது. கடைசியில் இவர்களுக்குள்ள பஞ்சாயத்து முடிந்தது. அதன் பின் மூர்த்தி அனைவரையும் வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விடுகிறார். வீட்டிற்கு வந்தாலும் கதிர் ஆவேசத்தில் கோபமாக பேசி அவர்களை உண்டு இல்லை என்று ஆக்காமல் விடமாட்டேன் என்று கூறுகிறார்.
இதைக் கேட்ட மூர்த்தி, கதிர் கன்னத்தை பளார் என்று அறைந்து விடுகிறார். நீ என்ன ரவுடி பையனா எதற்கெடுத்தாலும் போய் சண்டைக்கு நின்னுட்டு இருக்க. அப்படின்னா உனக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம். அப்பா நான் பேசிக்கொண்டிருக்கும் போது ஏன் முன்னாடியே எகிற என்று கதிரை லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார்.
ஏதோ கதிரை குப்பைத் தொட்டியில் இருந்து எடுத்து வளர்க்கிறார் என்பது போல் மூர்த்தி எப்போதும் கடுகடுவென்றே கோபத்தை காட்டுகிறார். ஆனாலும் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் என்னுடைய அப்பா தான் என் உலகம் என்று அவருக்கு சப்போர்ட்டாக கதிர் பக்கபலமாக இருந்து வருகிறார்.