வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

குணசேகரனுக்கு எதிராக எமனாக நிற்கும் தோழர்.. அப்பத்தாவிற்கு பதிலாக பலிகடாக சிக்கிய ஜீவானந்தம்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் யாருக்கு என்ன அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்ற தருணம் தற்போது நெருங்கி விட்டது. இதில் ஒவ்வொருவரும் அவர்களுடைய பகையை தீர்த்துக் கொள்ள மறைமுகமாக எதிராளிகளுக்கு குறி வைத்து வருகிறார்கள். அந்த வகையில் சைலன்டாக யாருக்கும் தெரியாமல் அப்பத்தா மற்றும் ஜீவானந்தத்திற்கு குறி வைத்து இருக்கிறார் குணசேகரன்.

இந்த விஷயம் குணசேகரனின் தம்பிகளுக்கு கூட தெரியாத வகையில் கமுக்கமாக காய் நகர்த்துகிறார். அதே மாதிரி அப்பத்தா ஏற்பாடு பண்ண நிகழ்ச்சிக்கு பக்கத்திலேயே அந்த மர்ம நபர் அப்பத்தா மற்றும் ஜீவானந்தத்திற்கு கூறி வைத்து காத்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் குணசேகரன் மற்றும் கதிரின் கதையை முடிப்பதற்காக கௌதம் மறைமுகமாக இருந்து தாக்கப் போகிறார்.

இந்த சூழலில் யார் யாருடைய உயிருக்கு ஆபத்தாக போவது என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. அத்துடன் அப்பத்தா அந்த 40% சொத்தை வீட்டில் கனவுகளுடன் முடங்கி கிடக்கும் பெண்களுக்கு விடிவு காலம் ஏற்படுத்தும் வகையில் ஒரு இயக்கத்தை ஆரம்பிக்கப் போகிறார். இந்த விஷயம் கண்டிப்பாக குணசேகரன் வீட்டில் இருக்கும் பெண்களையும் தாண்டி மற்றவர்களுக்கும் பயன்படுத்தும் விதமாக இருக்கப் போகிறது.

Also read: குணசேகரன் ஆசைப்பட்ட 40% சொத்துக்கு முடிவு கட்டிய அப்பத்தா.. மொத்த பிளானையும் சொதப்பிய தோழர்

அது மட்டும் இல்லாமல் இதை பாதுகாக்கும் பொறுப்பையும் ஜீவானந்தத்திடம் ஒப்படைக்க போகிறார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத குணசேகரன் கோபத்தின் உச்சகட்டத்திற்கு போகப் போகிறார். மேலும் அப்பத்தாவிற்கு வைத்த குறியில் பலிகடாக ஜீவானந்தம் மாட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் அப்பத்தாவிற்கு ஒரு பாதுகாவலனாக தான் மேடையில் இருக்கிறார்.

அடுத்ததாக குணசேகரன் மற்றும் கதிரின் கதையை முடிப்பதற்காக கௌதம் பிளான் பண்ணி இருக்கிறார். இதில் கண்டிப்பாக அண்ணனுக்கு பதிலாக கதிர் மாட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆக மொத்தத்தில் இங்கே ஒரு தரமான எதிர்பாராத சம்பவங்கள் பல நடக்கப் போகிறது. அடுத்தபடியாக இந்தப் பிரச்சனைகளுக்குப் பிறகு குணசேகரன் வீட்டில் இருக்கும் நான்கு மருமகளின் வாழ்க்கை மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இதற்கிடையில் திருவிழா நிகழ்ச்சியில் குணசேகரன் அனைவரது முன்னாடியும் ஜீவானந்தத்திடம் நல்ல விதமாக பேசினதுக்கு பின்னணியில் ஒரு காரணமும் இருக்கிறது. அதாவது வந்த இடத்தில் அவருடைய கோபத்தை காட்டினால் ஜீவானந்தத்தின் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அனைவரும் குணசேகரனை சந்தேகப்பட்டு விடுவார்கள் என்பதற்காக நல்லவர் மாதிரி பேசி வேஷம் போட்டிருக்கிறார். ஆனால் இதில் யாருக்கு என்ன ஆகப் போகிறது என்பதுதான் மிகப்பெரிய ட்விஸ்ட்டாக இருக்கிறது.

Also read: சக்தியிடம் பொட்டி பாம்பாக அடங்கிய ஜான்சி.. குணசேகரனை அலேக்கா தூக்கப் போகும் ஜீவானந்தம்

- Advertisement -

Trending News