மௌன ராகம் 2 எடுக்க ஆசை பட்ட மணிரத்னம்.. அந்த ஒரு சீன் பிடிக்காததால் குட்பை சொன்ன ‘மைக்’ மோகன்

Mouna Ragam 2: இயக்குனர் மணிரத்தினத்தின் பெயர் சொல்லும் படங்களில் எப்போதுமே மௌன ராகத்திற்கு இடம் உண்டு. ஒரு தலை காதல், காதல் தோல்வி, திருமணத்திற்கு பிறகு காதல் என மொத்தத்தையும் ஒரே படத்தில் கொட்டி சினிமா ரசிகர்களை சிலாகிக்க வைத்திருப்பார்.

நிலாவே வா, சின்ன சின்ன வண்ணக்குயில், பனி விழும் இரவு என இந்த படத்தின் பாடல்கள் இன்று வரை மனதை வருடிக் கொண்டிருக்கிறது. படத்தின் கடைசி சீனில் தான் மோகன் மற்றும் ரேவதி சேருவது போல் இருக்கும்.

படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவுடன் மணிரத்தினத்துக்கு மௌன ராகம் படம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தால் எப்படி இருக்கும் என்ற யோசனை வந்தது. இதை இரண்டாம் பாகமாக எடுக்க வேண்டும் என திட்டமிட்டார்.

அந்த ஒரு சீன் பிடிக்காததால் குட்பை சொன்ன ‘மைக்’ மோகன்

அதாவது ரேவதி மற்றும் மோகன் ஜோடிக்கு குழந்தைகள் பிறப்பது, அதற்கு அடுத்த திரைக்கதை என கதையை நகர்த்த ஆசைப்பட்டார். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள், அதில் கடைசி குழந்தை மனவளர்ச்சி குறைவான குழந்தை.

இந்த ஒன் லைன் ஸ்டோரியை கேட்டவுடன் கண்டிப்பாக அஞ்சலி படம் ஞாபகம் வந்திருக்கும். உண்மையிலேயே அஞ்சலி படத்தின் கதை தான் மௌன ராகம் 2. அஞ்சலி கதையை மொத்தமாக எழுதி எல்லாம் ஓகே ஆகிவிட்டது.

மோகனிடமும் மணிரத்தினம் கதை சொல்லிவிட்டார். மோகனுக்கு இந்த படத்தின் ஒரு காட்சியில் ரொம்பவே நெருடல் இருந்தது. ஒரு இரண்டு வயது மதிக்கத்தக்க மனவளர்ச்சி குறைந்த குழந்தையை எதற்காக தனி ரூமில் அடைத்து வைக்க வேண்டும் என்பதுதான்.

இந்த ஒரு காட்சியில் மணிரத்தினம் மற்றும் மோகனுக்கு கடைசிவரை ஒத்துப் போகவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் மோகன் தனக்கு இந்த படத்தில் நடிப்பதற்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டு டாட்டா காட்டிவிட்டார்.

இதை மோகன் சமீபத்திய பேட்டியில் சொல்லி இருக்கிறார். அதன் பின்னர் தான் ரகுவரன் உள்ளே வந்து மௌன ராகம் 2 அஞ்சலியாக மாறியது. அஞ்சலி படம் அன்றைய காலகட்டத்தில் சக்கை போடு போட்டது.

2வது இன்னிங்ஸை தொடங்கிய மைக் மோகன்

Next Story

- Advertisement -