வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

விஜய்யை வைத்து பிரசாந்த், மைக் மோகன் போட்டிருக்கும் பலே திட்டம்.. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா

Thalapathy Vijay: சினிமா என்பது ஒரு மிகப்பெரிய வியாபாரக்கூடம். வெற்றி என்பது இருக்கும் வரைக்கும் தான் ஒரு நடிகரை சுற்றி கூட்டமும் இருக்கும். தோல்வியை சந்தித்த ஹீரோக்களை சினிமா எட்டி பார்ப்பது கூட கிடையாது. மேலும் நீண்ட காலம் வெற்றியை மட்டுமே தக்க வைத்துக் கொண்டிருக்கும் நடிகர்கள் என்பதும் இதில் ரொம்பவும் குறைவானவர்கள் தான்.

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ஓஹோ என்று கொடி கட்டி பறந்து விட்டு அதன் பின்னர் இருக்கும் இடம் தெரியாமல் போனவர்கள் தான் மைக் மோகன் மற்றும் பிரசாந்த். நடிகர் மைக் மோகன் கமலஹாசனுக்கு போட்டியாக சினிமாவில் களம் இறக்கினார்கள் என்று சொல்வதுண்டு. அவரும் மிகப்பெரிய உச்சத்தை அடைந்தார். பெண் ரசிகைகளும் அவருக்கு அதிகம்.

முன்னணி ஹீரோவாக கொடிகட்டி பறந்த மைக்மோகனுக்கு 1999க்கு பிறகு படங்களே இல்லாமல் போனது. 2008இல் மீண்டும் அவர் கம்ப கொடுத்த போது தோல்வியைத்தான் சந்தித்தார். அதேபோன்றுதான் டாப் ஸ்டார் பிரசாந்த். விஜய் மற்றும் அஜித் அறிமுக ஹீரோக்களாக இருக்கும்பொழுது பிரசாந்த் முன்னணி ஹீரோவாக இருந்தார். ஆனால் தற்போது நிலைமையே வேறு.

பூனை கண் மூடினால் உலகமே இருட்டு என நினைத்துக் கொள்ளும் என்பதை போல் தான் பிரசாந்த் மற்றும் மோகன். நடித்தால் ஹீரோ தான் என்ற அடம்பிடித்தார்கள். ஒரு கட்டத்தில் நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தில் இவர்கள் கமிட் ஆகிய போது ஈகோ இல்லாமல் படத்திற்கு ஓகே சொல்லியது போல் தான் தெரிந்தது. ஆனால் இவர்களது திட்டமே வேறு.

மைக் மோகன் ஹரா என்னும் ஒரு படத்தில் நடித்துவிட்டு அதை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். அதேபோன்றுதான் நடிகர் பிரசாந்த் நடித்த அந்தகன் படமும். இப்போது தளபதி 68 படத்தில் நடித்து விட்டால் இவர்களுடைய முகம் ரசிகர்களுக்கு ரிஜிஸ்டர் ஆகிவிடும். இதன் மூலம் படத்தை ரிலீஸ் செய்வதோடு அடுத்தடுத்து வாய்ப்புகளையும் அள்ளுவதுதான் இவர்களது திட்டம்.

பல வருடங்களாக பட வாய்ப்புகளே இல்லாமல் இருந்த மோகனுக்கு இந்த படத்தில் சம்பளம் ரெண்டு கோடி. கரும்பு தின்ன கூலியா என்பது போன்று தான் இப்போது பிரசாந்த் மற்றும் மோகன் தளபதி 68-யில் நடிக்கிறார்கள். இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு கண்டிப்பாக சில வருடங்களுக்கு இவர்களது காட்டில் பட மழை தான் அடித்துக் கொளுத்த போகிறது.

- Advertisement -

Trending News