சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

உண்மை சொல்லாமல் தியாகி மாறி சுற்றும் முத்து.. மருமகனை ரவுடி என மட்டம் தட்டி பேசிய மீனாவின் அம்மா

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து மீது தற்போது அனைவரும் கோபத்தில் இருக்கிறார்கள். ஆனாலும் மீனா அப்பா இறந்து ஒரு வருடம் ஆகியதால் அதற்கு செய்ய வேண்டிய காரியத்தை செய்வதற்காக மீனாவின் அம்மா முத்து வீட்டிற்கு வந்து முறையாக அனைவரையும் அழைத்தார். ஆனால் யாரும் போகாத சூழ்நிலையில் முத்து நீ கண்டிப்பாக போகவேண்டும் என்று அண்ணாமலை கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து மீனா அவருடைய வீட்டிற்கு சென்று அப்பாக்கு செய்யவேண்டிய எல்லா சடங்கு சம்பிரதாயம் அனைத்தையும் செய்துவிட்டு முத்துவிற்காக காத்து கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அதில் கலந்து கொள்வதற்காக வந்து விட்டார்கள். வந்ததும் முத்து எங்கே என்று ஒவ்வொருவரும் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

பிறகு நேரம் போய்க் கொண்டிருக்கிறது என்பதால் விஷயத்தை ஆரம்பித்து விடலாம் என்று பக்கத்தில் இருப்பவர்கள் சொன்னதால் மீனாவின் தம்பி, ஆராதனை காட்டுவதற்காக முயற்சி எடுத்தார். ஆனால் கையில் அடிபட்டு இருந்ததால் அவரால் முழுசாக பண்ண முடியாமல் போய்விட்டது.

Also read: விஜயாவுக்கு வாய்க்கொழுப்பு ரொம்ப ஜாஸ்தியா போச்சு.. மீனா குடும்பத்தை மட்டம் தட்டி பேசிய முத்துவின் அம்மா

அத்துடன் வலியில் துடித்ததால் மீனாவின் அம்மா கோபத்துடன் முத்துவை, மருமகன் என்று கூட நினைக்காமல் ரவுடி, குடித்து விட்டால் என்ன பண்ணுகிறோம் என்று தெரியாமல் எல்லாத்தையும் அடிக்கிறதே வேலையாக வைத்திருக்கிறார் என்று சொல்கிறார். அந்த நேரத்தில் முத்துவும் வெளியில் நின்று எல்லாத்தையும் கேட்டு விடுகிறார்.

பிறகு முத்துவை பார்த்ததும் அனைவரும் ஷாக்காக நிற்கிறார்கள். கடைசியில் மீனாவிற்காகவும், மீனா குடும்பத்திற்காகவும் நல்லது என்று செய்த முத்துவிற்கு கிடைத்தது கெட்ட பெயர் தான். அட்லீஸ்ட் என்ன நடந்தது என்ற உண்மையை மீனாவிடம் சொல்லி இருந்தால் கூட இந்த அளவுக்கு பிரச்சினை இருந்திருக்கிறது. ஆனால் என்னமோ தியாகி மாதிரி எல்லாத்தையும் மறைத்துக் கொண்டு சுற்றுவது முத்துவிற்கு கிடைத்த கெட்ட பெயர்.

அடுத்ததாக முத்து இரவு நேரத்தில் தூங்குவதற்காக மொட்டை மாடிக்கு வந்திருக்கிறார். அதே நேரத்தில் மனோஜ்க்கு வேலை போய்விட்டது என்று தெரிந்து ரோகிணி திட்டியதால், மனோஜும் மொட்டை மாடிக்கு வருகிறார். அப்பொழுது ரவியும் மொட்ட மாடியில் தூங்குவதற்காக வருகிறார்கள். ஆக மொத்தத்தில் விஜயாவின் மூன்று மகன்களும் நிம்மதி இல்லாமல் தவித்து வருகிறார்கள்.

Also read: அப்பாவிடம் உண்மையை சொல்லப் போகும் முத்து.. தம்பியின் லட்சணம் என்னவென்று மீனாக்கு தெரிய வருமா?

- Advertisement -

Trending News