வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

அப்பாவிடம் உண்மையை சொல்லப் போகும் முத்து.. தம்பியின் லட்சணம் என்னவென்று மீனாக்கு தெரிய வருமா?

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனா தன்னுடைய தம்பியை பார்ப்பதற்காக வீட்டிற்கு போய் இருக்கிறார். போன இடத்தில் தம்பி ரொம்பவே கை வலியால் அவஸ்தைப்படுவதை பார்த்து நொந்து போய் இருக்கிறார். அத்துடன் மீனாவின் அம்மாவும் தன் மகன் இந்த நிலைமையில் பார்ப்பதற்கு ரொம்பவே வேதனையாக இருக்கிறது என்று புலம்பிக்கொண்டே மகனை தேற்றி வருகிறார்.

அந்த சமயத்தில் மீனாவின் தம்பியை பார்ப்பதற்கு முத்துவின் அப்பா வீட்டிற்கு வருகிறார். வந்ததும் எப்படி இருக்கு என்று விசாரித்த பிறகு பணம் செலவுக்கு கொடுக்கிறார். அதுக்கு மீனாவின் அம்மா பணம் எல்லாம் தேவையில்லை, இப்படி எக்ஸாம் எழுதுற பையனுடைய கையை உடைத்து விட்டு இருக்காரு. அவருக்கு அப்படி என்னதான் கோபம். தப்பே பண்ணினாலும் அதற்கு இப்படியா தண்டிக்க வேண்டும் என்று வேதனையுடன் கேட்கிறார்.

உடனே முத்துவின் அப்பா அவன் செஞ்சது தப்புதான். ஆனால் அவன் எந்த ஒரு விஷயம் செய்தாலும் அதற்கு பின்னாடி ஒரு காரியம் இருக்கும். அவன் மீனாவின் மேல் உயிரே வைத்திருக்கிறான். கண்டிப்பாக மீனா வேதனைப்படும் அளவிற்கு எதுவும் பண்ண நினைக்க மாட்டான். இதற்கு பின்னாடி ஏதோ ஒரு விஷயம் கண்டிப்பாக இருக்கும் என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.

Also read: முத்துவிடம் இருந்து எஸ்கேப் ஆன ரோகினி.. மாட்டிக்கொண்டு முழிக்கும் மீனா, மனோஜ்

அடுத்து வீட்டிற்கு வந்த முத்துவிடம் அண்ணாமலை தனியாக கூப்பிட்டு கேட்கிறார். நீ ஏன் இப்படி பண்ணினாய் என்ன காரணம் என்று சொல்லு என கேட்கிறார். அதற்கு முத்து அவன் ரொம்ப ஓவராக பண்ணுகிறான். தப்பு மேல தப்பு பண்ணிக்கிட்டு அதை தட்டி கேட்டா ரொம்ப அவமானப்படுத்தி அசிங்கப்படுத்தி விட்டான் என்று சொல்கிறார்.

அந்த நேரத்தில் இவர்கள் பேசும் பொழுது மீனாவும் வெளியே இருந்து கேட்டுக் கொண்டு வருகிறார். அந்த வகையில் முத்து எல்லா உண்மையும் அப்பாவிடம் சொல்லும் பொழுது மீனா கேட்டால் இந்த பிரச்சனை இதோடு முடிந்து விடும். அத்துடன் முத்துவின் மீது எந்த தவறும் இல்லை என்ற நிலைமைக்கு மீனாவும் வந்துவிட்டு தம்பியை திருத்துவதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.

அப்படி இல்லை என்றால் மீனா ஒட்டு கேட்கிறார் என்று முத்து பார்த்துவிட்டு எல்லாத்தையும் மறைத்து விட்டால் இன்னும் பிரச்சினை தான் பெருசாகி கொண்டே போகும். ஏனென்றால் மீனாவுக்கு தெரிந்தால் மட்டும்தான் தம்பியை கண்டித்து திருத்துவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். இல்லை என்றால் இன்னும் அதிகமாகவே மீனாவின் தம்பி தப்புக்கு மேல் தப்பு பண்ணி மாட்டுவதற்கு வாய்ப்பு இருக்கு.

Also read: பிள்ளை இல்லாத வீட்டில் துள்ளி விளையாடும் விஜயா.. சைடு கேப்பில் ரொமான்ஸில் புகுந்த முத்துவின் அப்பா

- Advertisement -

Trending News