Actor Vijay : விஜய் தற்போது கோட் படத்தில் நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வருகின்ற தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 வெளியாகிறது.
இதை தொடர்ந்து சமீபத்தில் கோட் படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி இருந்தது. செப்டம்பர் 5ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. கோட் படத்திற்கு போட்டியாக மற்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ரேசில் இருந்து அஜித், சூர்யா போன்றோர் விலகி இருக்கின்றனர். அதாவது அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் படப்பிடிப்பு இடையில் தாமதமானது.
விஜய்யுடன் மோதும் சிவகார்த்திகேயன்
மேலும் மீண்டும் படப்பிடிப்பு ஏப்ரலுக்குப் பிறகு தொடங்க உள்ளது. ஆகையால் செப்டம்பர் மாதம் விடாமுயற்சி படம் வெளியாக வாய்ப்பே இல்லை. அடுத்ததாக அஜித் நடிக்க உள்ள குட் பேட் அக்லி படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
சூர்யா கங்குவா படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. இந்த படமும் இப்போது செப்டம்பர் ரிலீஸ் ஆகாமல் தள்ளி போய் உள்ளது. ஆனால் விஜய்க்கு போட்டியாக மாஸ் ஹீரோ சிவகார்த்திகேயன் இறங்குகிறார்.
கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அமரன் படம் தான் கோட் படத்துடன் மோத இருக்கிறது. ஆகையால் இந்த ரேசில் தளபதியா அல்லது சிவகார்த்திகேயனா என்பது படம் வெளியாகி வசூல் பொருத்து தெரியவரும்.