கேரியருக்கு முட்டுக்கட்டையான 5 நடிகைகளின் கல்யாணம்.. வாய்ப்புக்காக படாதபாடு படும் எமி ஜாக்சன்

Amy Jackson: பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகளாக வளம் வந்த சில நடிகைகள் திருமணம் செய்து கொண்ட பிறகு நடிக்க வாய்ப்புகள் அதிகம் இன்றி திணறி வருகின்றனர். திருமணமாகியும் நடிப்பதற்கு ஆர்வம் காட்டும் சில நடிகைகள் தங்கள் கேரியர்க்கு முட்டுக்கட்டையான தங்களின் திருமணங்களே என்றாலும் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக புகைப்படங்களை பகிர்ந்து கொண்டும் இருக்கின்றனர். அவ்வாறு வாய்ப்புகளுக்கு அலையும் ஐந்து நடிகைகளை பற்றிய பதிவு.

காஜல் அகர்வால் : முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, கார்த்திக், ஜெயம் ரவி ஆகியோருடன் ஜோடியாக நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை காஜல் அகர்வால். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு கெளதம் கிச்லு என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. 2022-ல் இவர் நடித்த ஹே சினாமிகா என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கைவசம் இந்தியன் 2, பகவந்த கேசரி ஆகிய படங்கள் நடித்துள்ளார். வாய்ப்புகள் குறைந்தாலும் நடிப்பதற்கு விடாமல் முயற்சி செய்து வருகிறார் காஜல் அகர்வால். தற்போது சத்தியபாமா என்ற படத்தின் டைட்டில் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இப்படத்தில் காவல் உதவி ஆய்வாளராக நடித்துள்ளார் காஜல் அகர்வால்.

Also Read : தனுஷ் பாடலை படத்தின் தலைப்பாக வைத்த காஜல் அகர்வால்.. இணையத்தில் வைரலாகும் அப்டேட்

நயன்தாரா : 2005 இல் அறிமுகமான ஐயா படத்திலிருந்து பரவலான ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டவர் நயன்தாரா. தொடர்ந்து நடித்து சிறந்த கதைகளை தேர்வு செய்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்தவர் இவர். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின்னர் மார்க்கெட் இழந்துள்ள நயன்தாரா, தொழில் சார்ந்து பல சறுக்கல்களை சந்தித்து வருகிறார். அட்லீ இயக்கத்தில் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானுடன் ஜவான் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். நயன்தாரா பிரபல யூடியூபர் விக்கி இயக்கத்தில் கதாநாயகியை மையமாக வைத்து உருவாக உள்ள படத்தில் நடிக்கிறார். நயன்தாரா யூடியூபர் ஒருவரது படத்தில் நடிப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

எமி ஜாக்சன் : 2010-ல் இயக்குனர் ஏ. எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த மதராசபட்டினம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பிரிட்டிஷ் நடிகை எமி ஜாக்சன். தாண்டவம், தெறி, ஐ, 2.0, தங்கமகன் போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார் எமி ஜாக்சன். இவர் ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொள்ளாமலேயே ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால் இவர்கள் 2019 ஆம் ஆண்டு பிரிந்தனர். அதன்பின் படங்களில் நடிக்கும் வாய்ப்புக்காக படாத பாடு படுகிறார் எமி ஜாக்சன். இந்த நிலையில் பிரிட்டிஷ் நடிகரான எட் வெஸ்ட்விக் என்பவரை 2 வருடங்களாக காதலித்து வருகிறார். சமீபத்தில் இவர்கள் நடுரோட்டில் லிப் லாக் அடிக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Also Read : திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான 5 நடிகைகள்.. குழந்தை பெற்றுப்பின் கல்யாணம் பண்ணிய விஜய் பட நடிகை

நிக்கி கல்ராணி : ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நிக்கி கல்ராணி. யாகாவாராயினும் நாகாக்க மற்றும் மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் ஆதியை காதலித்தார். இவர் கடந்த வருடம் வீட்டார்கள் சம்மதத்துடன் நடிகர் ஆதியை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் நடிக்க அதிக வாய்ப்புகள் கிடைக்காத நிக்கி கல்ராணி, தற்சமயம் மலையாளத்தில் உருவாகி வரும் விருன்னு என்கிற படத்தில் நடிகர் அர்ஜுனுடன் இணைந்து நடிக்கிறார். சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நிக்கி கல்ராணி அவ்வப்போது புகைப்படங்களை பகிர்வதன் மூலம் ரசிகர்களுடன் இன்னும் டச்சில் இருந்து வருகிறார்.

ஹன்சிகா மோத்வானி : என்றென்றும் காதல், ரோமியோ ஜூலியட், மான் கராத்தே, அரண்மனை, அரண்மனை 2 போன்ற படங்களில் அழகு பொம்மையாக வளம் வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் கடந்த ஆண்டு தன் சிறந்த தோழியின் முன்னாள் கணவர் சோஹேனன் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு தன்னிடம் பெரிய மாற்றம் இல்லை என்றும் எனக்கு கூடுதலாக ஒரு நண்பர் கிடைத்து இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார் நடிகை ஹன்சிகா. தற்போது 31 குழந்தைகளை தத்தெடுத்து படிக்க வைத்துக் கொண்டு இருப்பதாகவும் இன்னும் பல குழந்தைகளை தத்தெடுக்க தான் திட்டமிட்டுள்ளதாகும் அவர் கூறியுள்ளார். அதிக படங்களில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் ஆதி, யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள பார்ட்னர் என்ற படத்தில் நடித்துள்ளார். திடீரென ஆணாக இருந்த ஒருவர் பெண்ணாக மாறினால் என்ன நடக்கும் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இப்படத்தில் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

Also Read : தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்ட ஹன்சிகா.. யாருக்கும் தெரியாமல் செய்த மட்டமான வேலை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்