தனுஷ் பாடலை படத்தின் தலைப்பாக வைத்த காஜல் அகர்வால்.. இணையத்தில் வைரலாகும் அப்டேட்

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் நடிப்பில் இறுதியாக லைவ் டெலிகாஸ்ட் வெப் சீரிஸ் வெளியானது. தொடர்ந்து தமிழில் பாரிஸ் பாரிஸ், ஹேய் சினாமிகா, கோஸ்டி, இந்தியன் 2 படங்களும் தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா படமும் கைவசம் உள்ளன.

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால், ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அறிமுக இயக்குனர் ராஜா சரவணன் இயக்கும் இப்படத்திற்கு ரவுடிபேபி என பெயரிட்டுள்ளனர். மேலும், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், லட்சுமி ராய் போன்றோர் இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்கிறார். ஒளிப்பதிவாளர் செல்லதுரை ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் என்பவர் இசையமைக்க உள்ளார்.

kajal-agarwal-01
kajal-agarwal-01

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் திருமணத்திற்குப் பின்னர் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது கைவசம் அதிக படங்களை வைத்து உள்ள முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -