கிளிக்கு இறக்க முளைச்சிடுச்சு பறந்து போச்சு! வாரிசு நடிகரை பற்றி புலம்பும் மணிரத்தினம்

Mani Ratnam, who did not consider Mammootty’s successor Dulquer: தமிழ் சினிமாவின் முத்தாய்ப்பான இயக்குனர்களில் மணித்தினத்தின் பங்கு அளப்பரியது. 

தனது படைப்பில் முன்னணி நடிகர்கள் ஆனாலும் எந்த ஒரு சமரசமும் செய்யாது, தான் நினைப்பதை கதையில் கொண்டு வருவதில் அவருக்கு நிகர் அவரே!

1991 ஆம் ஆண்டு மணிரத்தினத்தின் இயக்கத்தில் ரஜினி மற்றும் மம்மூட்டி நடித்த திரைப்படமே தளபதி. மகாபாரதத்தின் சாயலை கொண்டு அன்றைய சூழலுக்கு தக்கவாறு மணிரத்தினம் படைத்த காவியமே தளபதி.

தமிழ்நாடு மற்றும் கேரளா இரு மாநிலத்து ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது தளபதி.

மணிரத்தினத்தின் இயக்கத்தில் நடிப்பதை பெரும் பாக்கியமாகக் கொண்ட மம்முட்டி இதே வாய்ப்பை தன் மகன் துல்கர் சல்மானுக்கும் வழங்குமாறு கேட்டுக் கொண்ட திரைப்படமே ஓ காதல் கண்மணி.

இன்றைய தலைமுறைக்கு ஏற்ப லிவிங் டுகெதர் வாழ்க்கையை கருவாக வைத்து துல்கர் மற்றும் நித்யா மேனன் நடிப்பில் மணிரத்தினம் இயக்கிய திரைப்படமே ஓ காதல் கண்மணி.

இயக்குனரின் மேல் உள்ள நம்பிக்கையால் மணிரத்தினம் மற்றும்  உலகநாயகன் கமலஹாசன் இணையும் தக் லைஃப் திரைப்படத்தில், துல்கரை நடிக்க கேட்டுக் கொண்ட போது. எந்தவித மறுப்பும் சொல்லாமல் சம்மதித்தார்.

தக் லைஃப்பில் இருந்து விலகிக் கொண்ட துல்கர்

தக் லைஃப் திரைப்படத்தில் உலகநாயகன் கமலஹாசன் உடன் ஜெயம் ரவி, திரிஷா, துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி என பலரும் இணைய இருந்தனர்.

படத்தைப் பற்றி அறிவிப்பு வந்து போஸ்டர் போட்டதுடன் ஆமை வேகத்தில் நகர ஆரம்பித்தது தக் லைஃப். பாராளுமன்ற தேர்தலில் உலக நாயகன் பிசியாக இருப்பதனால் மற்ற காட்சிகளை படமாக்க சொல்லி மேல் இடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது.

துல்கர் தனது கதாபாத்திரம், கால் சீட் போன்ற எவை பற்றியும் அறியாமல் பல நாட்கள் மெட்ராஸ் டாக்கிஸ் ஆபீஸ்லயே காத்திருந்ததாக சொல்லப்படுகிறது.

துல்கருக்கான முன்னறிவிப்பு எதுவும் முறையாக தரப்படாததால், பொறுத்துப் பார்த்தவர் வெறுத்துப் போனார்.

தற்போது மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக பிசியாக இருக்கும்  துல்கரால் தனக்கு நடப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் மணிரத்தினத்திடம் நைசாக கூறி டேக்கா வாங்கிப் போனார்.

முதலில் இதை பெரிதாக கண்டுகொள்ளாத மணிரத்தினம் துல்கருக்கு பதில் சிம்புவை களம் இறக்கினார். தற்போது தக் லைஃபில் சிம்பு வருகையினால் ஜெயம் ரவியும் கழண்டு கொண்டார்.

தப்பு எல்லாத்தையும் இவர் மேல வச்சுகிட்டு கிளிக்கு இறக்க முளைச்சிடுச்சு! பறந்து போச்சுன்னு! சொன்னா நியாயமா..? 

யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் மணிரத்தினத்தின் போதாத காலம் படத்தின் நாயகனுக்கு படத்தின் மீது அக்கறை இல்லை, இணை நடிகர்களும் ஒருவர் பின் ஒருவராக கழண்டு கொள்கின்றனர். இதே நிலைமை நீடித்தால் தக் லைஃப் மீள்வது கஷ்டம் தான்.  

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்