முத்துவை வைத்து ஸ்ருதியை பிரிக்கப் போகும் மாமி.. விஜயாவிடம் பலிகாடாக சிக்கிய ரோகிணி

Siragadikka Aasai : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி பொய்ப் பித்தலாட்டம் பண்ணி புகுந்த வீட்டில் ராணி மாதிரி இருக்கலாம் என்று நினைத்தார். ஆனால் நினைத்ததை விட எதிர் மாறாக நடப்பது விஜயாவிடம் ஒவ்வொரு விஷயத்திலும் பலிகாடாக சிக்குவது தான்.

அதாவது ரோகினி உண்மையிலே பணக்கார பெண் என்று நினைத்து விஜயா எதற்கெடுத்தாலும் பணத்தைக் கேட்டு டார்ச்சர் கொடுக்கிறார். அதுமட்டுமில்லாமல் தற்போது மனோஜ்க்கு வேலை இல்லாததால் ரோகிணி உன்னுடைய அப்பாவிடம் சொல்லி மனோஜ் பிசினஸ் பண்ணுவதற்கு ஏற்பாடு பண்ணு என்று சொல்கிறார்.

போதாக்குறைக்கு மீனா பூ கெட்டி அதன் மூலம் வந்த லாபத்தை வைத்து முத்துவுக்கு கார் வாங்கி கொடுத்தார். இதனால் விஜயா இந்த ஒரு காரணத்தை வைத்துக் கொண்டே ரோகினியை நீயும் கூடிய விரைவில் மனோஜ் பிசினஸ் பண்ணுவதற்கு உங்க அப்பாவிடம் பணத்தை வாங்கி கொடு என்று சொல்கிறார்.

இதை எப்படி சமாளிப்பது விஜயாவை எப்படி அடக்குவது என்று தெரியாமல் ரோகினி முழித்துக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் சுருதி அம்மா வேற புதுசா ஒரு பிளான் போட்டு விஜயாவிடம் சொல்கிறார். அதாவது சுருதிக்கு தாலி பெருக்கி ஃபங்ஷன் வைக்க வேண்டும் என்று சொல்கிறார்.

விஜயாவிடம் பலிகாடாக சிக்கிய ரோகிணி

உடனே விஜயாவும் சந்தோசம் இதை நீங்கள் சொல்றபடி வைத்துக்கொள்ளலாம். ஆனால் வீட்டிற்கு மூத்த மகள் ரோகினிக்கும் இந்த பங்க்ஷன் நடக்கவில்லை. அதனால் இரண்டு பேருக்கும் சேர்த்து வைக்கலாமா என்று கேட்கிறார்.

அதற்கு ஸ்ருதி அம்மாவும் ஓகே சொல்லிவிட்டு வீட்டிற்கு போய் விடுகிறார். போனதும் சுருதி அப்பாவிடம் இந்த விஷயங்களை சொல்லி ஒரு பிளான் போடுகிறார்.

அதாவது இந்த ஃபங்ஷனை நிறைய பேரை கூப்பிட்டு பெருசாக நடத்தலாம். அப்படி நடத்தும் போது நான் ஏதாவது ஒரு பிரச்சனையை கொண்டு வந்து முத்து மூலமாக அதை வெடிக்க வைக்கிறேன். ஏற்கனவே முத்து ஒரு ரவுடி என்பதால் கண்டிப்பாக சுருதிக்கு ஒரு பிரச்சனை அவமானத்தை ஏற்படுத்தும் விதமாக அங்கே நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

உடனே இந்த சான்ஸ் வைத்துக்கொண்டு சுருதி மற்றும் ரவி அப்படியே நம்முடன் வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விடுகிறேன் இதுதான் என்னுடைய பிளான் என்று சொல்கிறார். ஆக மொத்தத்தில் வரப்போற ஃபங்ஷனில் ஒரு கலவரம் ஏற்பட போகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்