உயிர் போகும் அளவிற்கு சர்ச்சையை ஏற்படுத்தும் மாமன்னன் ரிலீஸ்.. முக்காடு போட வைக்கும் உதயநிதி

Actor Udhayanidhi: உதயநிதி சினிமாவிற்கு வந்து குறுகிய காலத்திற்குள் கதையின் நாயகனாக மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். ஆனால் அதற்குள்ளேயே சினிமாவிற்கு குட் பாய் சொல்லும் விதமாக கடைசி படமாக மாமன்னன் படத்தில் நடித்திருக்கிறார். அதனாலேயே இப்படத்தை அதிக எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ஒவ்வொரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. அதாவது சென்னையின் மிகப் பழமையான மற்றும் பிரபலமான திரையரங்குகளில் ஒன்றுதான் உட்லண்ட்ஸ் தியேட்டர். தற்போது இந்த தியேட்டரின் உரிமையாளர் மாமன்னன் படத்தின் ரிலீஸ் குறித்து ஒரு ஆடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

Also read: மாமன்னனில் வடிவேலு, உதயநிதி ரத்த சொந்தமா? இணையத்தில் கசிந்த மொத்த கதை

அதில் இவர் வருத்தப்பட்டு மிகவும் நொந்து பேசியுள்ளார். ஏற்கனவே என்னுடைய நிலைமை தியேட்டருக்கு கரண்ட் பில் கூட கட்ட முடியாமல் கடன் வாங்கி தான் கட்டி வருகிறேன். ஏதோ என்னால் முடிந்தவரை தியேட்டரை மூடாமல் ஓட்டிக்கொண்டு வருகிறேன்.

இந்த நிலைமையில் நான் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பொழுது, என்னுடைய சூழ்நிலையை தெரிந்து கொள்ளாமல் மாமன்னன் படத்திற்காக என்னிடம் அதிக பணத்தை கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். அப்படி கேட்கும் பணத்தை கொடுத்தால் மட்டும் தான் அவர்கள் என்னிடம் படத்தை தர முடியும் என்று கூறி வருகிறார்கள்.

Also read: பட ரிலீசுக்கு முன்னாடியே இவ்வளவு அக்கப்போரா.. கமலை அவமதித்த இயக்குனர், பதட்டத்தில் உதயநிதி

அவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்தால், ஏற்கனவே கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கும் என்னுடைய திரையரங்கம் உடனடியாக இழுத்து மூட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிவிடும். அப்படி மட்டும் நடந்து விட்டால் நான் தற்கொலை தான் செய்ய வேண்டும். இப்படி நான் பேசிய வீடியோவை வைத்து என்னுடைய புகாராக எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறேன்.

ஆனால் இதை யாருமே கண்டு கொள்ளவில்லை, பெயருக்கு தான் தலைவர்கள் என்று இருக்கிறார்கள். ஆனால் அவர்களால் எங்களுக்கு எந்தவித பிரயோஜனமும் இல்லை. இப்படி உதயநிதி நடித்து வெளிவர இருக்கும் மாமன்னன் படத்திற்கு எதிர்ப்பு குரல் கொடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு உதயநிதி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று பலரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Also read: சினிமாவுக்கு டாட்டா காட்ட நினைத்த உதயநிதி.. கழுத்தில் கத்தி வைத்த பிரபல நிறுவனம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்