சினிமாவுக்கு டாட்டா காட்ட நினைத்த உதயநிதி.. கழுத்தில் கத்தி வைத்த பிரபல நிறுவனம்

Udhayanidhi Stalin: உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் மாமன்னன் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வரும் 29ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கூட மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும் படத்தின் டிரைலர் கிட்டத்தட்ட லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வைகைப்புயல் வடிவேலு மற்றும் பகத் பாசில் இருவரும் படத்திற்கு மிகப்பெரிய தூணாக நடித்திருக்கின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் தமிழக சட்டமன்றத்தின் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அதிரடி அறிவிப்பாக சினிமாவை விட்டு தான் ஒதுங்க இருப்பதாகவும், மாமன்னன் திரைப்படம் தான் தன்னுடைய கடைசி படம் என்றும் சொல்லிவிட்டார். உதய்யின் கடைசி படம் என்பதாலேயே மாமன்னன் திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பும், வரவேற்பும் அதிகமாக இருந்தது. ஆனால் இதற்கு எல்லாம் ஆப்பு வைக்கும் விதமாக தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

Also Read:எல்லா படங்களிலும் ஒரே சீனை காப்பியடிக்கும் மாரி செல்வராஜ்.. மாமன்னன் ட்ரைலரால் அம்பலமான சீக்ரெட்

கடந்த 2018 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் ஏஞ்சல் எனும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தின் எல்லா படப்பிடிப்பு வேலைகளும் முடிந்து கிட்டத்தட்ட 20 சதவீத காட்சிகள் மட்டும் இன்னும் படமாக்கப்பட வேண்டியது இருக்கிறதாம் . ஆனால் உதயநிதி இந்த படத்தை கண்டு கொள்ளாமல் மாமன்னனை முடித்துவிட்டு இதுதான் தன்னுடைய கடைசி படம் என்று சொல்லிவிட்டதால் அவர் மீது தற்போது புகார் கொடுத்திருக்கிறது அந்த தயாரிப்பு நிறுவனம்.

ஏஞ்சல் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகளுக்காக இதுவரை 13 கோடி செலவு செய்யப்பட்டிருப்பதாகவும், இன்னும் ஒரு சில காட்சிகளே படமாக்கப்பட வேண்டிய நிலையில் உதயநிதி கால்ஷீட் கொடுக்காமல் தட்டி கழித்து வருவதாகவும், தங்களுடைய படத்தை முடித்துக் கொடுத்த பிறகு தான் அவருடைய மாமன்னன் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் எனவும், அதுவரை அந்த படத்தின் ரிலீஸ் என்று தடை விதிக்க வேண்டும் எனவும் தயாரிப்பாளர்கள் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Also Read:தேவர்மகன் சாயலில் மாமன்னனாக அவதாரம் எடுத்த வடிவேலு.. எதிர்பார்ப்பை மிரள விட்ட ட்ரெய்லர்

இந்த படத்தை முடிப்பதற்கு உதயநிதி இன்னும் 8 நாட்களே கால்ஷீட் கொடுக்க வேண்டும் எனவும், அதோடு மட்டுமல்லாமல் இழப்பீடு தொகையாக 25 கோடி கொடுக்க வேண்டும் எனவும் தயாரிப்பு தரப்பில் கேட்கப்பட்டிருக்கிறது. மாமன்னன் திரைப்பட ரிலீஸுக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலின் இந்த புகார் குறித்து எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்று தெரியவில்லை.

தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கொடுக்கப்படும் இந்த அழுத்தத்திற்கு, உதயநிதி ஸ்டாலின் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. மாமன்னன் போன்ற ஒரு நல்ல திரைப்படத்தின் மூலம் தன்னுடைய சினிமா கேரியரை முடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்த உதயநிதிக்கு, தற்போது இந்த படம் ஒரு மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்து இருக்கிறது.

Also Read:மாமன்னன் வடிவேலுவால் அப்செட் ஆன உதயநிதி.. பிள்ளையார் பிடிக்க குரங்காய் மாறிய கதை

 

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்