பட ரிலீசுக்கு முன்னாடியே இவ்வளவு அக்கப்போரா.. கமலை அவமதித்த இயக்குனர், பதட்டத்தில் உதயநிதி

Actor Kamal: எனக்குன்னு எங்கிருந்துதான் வரீங்களோ, அப்படி ஒரு நிலைமையில் தான் உதயநிதி தற்போது இருக்கிறார். அரசியலில் தீவிரமாக இறங்கிய பிறகு சினிமாவில் நடிக்க கூடாது என்னும் முடிவை எடுத்துள்ள அவர் மாமன்னன் தான் தன்னுடைய கடைசி படம் என அறிவித்திருந்தார். அதுவே படத்திற்கான இலவச ப்ரமோஷன் ஆக இருந்தது.

ஆனால் அது அனைத்தும் இப்போது சல்லி சல்லியாய் நொறுங்கிப் போய் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் தான். ஏற்கனவே படத்தைப் பற்றி போகும் இடமெல்லாம் அலப்பறை கூட்டி வந்த இவர் தற்போது இசை வெளியீட்டு விழாவில் இழுத்து வைத்த ஏழரையால் உதயநிதி தான் படாத பாடு பட்டு கொண்டிருக்கிறார்.

Also read: ஒரே கல்லில் ரெண்டு மாங்கா லாபத்தை பார்த்த மாரி செல்வராஜ்.. உதயநிதி மனசு வைத்தால் எது வேணாலும் நடக்கும்

அண்மையில் நடந்த மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் கமல் கலந்து கொண்டு சிறப்பித்தார். அப்போது மேடையில் பேசிய மாரி செல்வராஜ் தேவர்மகன் படம் குறித்த விமர்சனங்களை முன் வைத்தார். அந்தப் படம் தான் ஜாதி உணர்வை தூண்டியது என்றும் கமல் அதற்கு பொறுப்பு என்ற ரேஞ்சில் அவர் பேசியது இப்போது கடும் கண்டனத்திற்கு ஆளாகி இருக்கிறது.

மேலும் விழாவிற்கு கூப்பிட்டு கமலை அசிங்கப்படுத்தி விட்டார்கள் என்றும் அவருடைய ரசிகர்கள் கொந்தளித்து போய் இருக்கின்றனர். அது மட்டும் இன்றி இயக்குனரின் இந்த பேச்சால் உலகநாயகனும் சிறிது வருத்தத்தில் தான் இருக்கிறார். ஆனாலும் விழா மேடையில் அவர் அனைவரையும் பாராட்டி பேசி பெருந்தன்மையோடு நடந்து கொண்டார்.

Also read: கமல்ஹாசன் மீது மாரி செல்வராஜுக்கு இருக்கும் வன்மம்.. தேவர்மகனை பழிவாங்க வரும் மாமன்னன்

இருப்பினும் தற்போது அவர் அதிக மன வருத்தத்தில் இருப்பதால் உதயநிதி அவரை சமாதானப்படுத்துவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். எப்போதுமே ஒரு படம் வெளியானால் தான் ஏதாவது ஒரு சர்ச்சை கிளம்பும். ஆனால் மாமன்னன் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இவ்வளவு அக்கப்போரை கூட்டி இருக்கிறது.

இவை அனைத்திற்கும் காரணமான இயக்குனர் தற்போது அமைதி காத்து வருகிறார். ஆனால் கடைசி படம் மூலம் மிகப்பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என்று நினைத்த உதயநிதி தான் பட ரிலீஸை நினைத்து பதட்டத்தில் இருக்கிறாராம். ஏனென்றால் மாமன்னன் படத்திற்கு முன்பு இருந்த எதிர்பார்ப்பு இப்போது கொஞ்சம் குறைந்திருப்பது தான் இதற்கு காரணம்.

Also read: கமலை வைத்துக்கொண்டே தேவர் மகன் சாதிய படம் என கூறிய மாரி செல்வராஜ்.. வெடிக்கும் சர்ச்சை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்