மைக்கேல் மதன காமராஜன் பட நடிகர் திடீர் மரணம்.. திரை உலகை உலுக்கிய அடுத்த சோகம் 

கமல்ஹாசன் நடிப்பில் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மைக்கேல் மதன காமராஜன். இந்தத் திரைப்படத்தில் கமல் 4 கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருப்பார். அதில் ஒரு கதாபாத்திரத்திற்கு பாடிகார்ட் கேரக்டரில் நடித்தவர் பிரவீன் குமார்.

அவர் நடித்த அந்த பீம்பாய் கேரக்டரை ரசிகர்களால் ஒருபோதும் மறக்க முடியாது. அளவுக்கு அதிகமான உயரமும், ஆஜானுபாகுவான உடலமைப்பும் கொண்ட அவர் நடித்த காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை மிகவும் ரசிக்க வைத்தது. அதிலும் நடிகர் நாகேஷை அவர் அலேக்காக தூக்கிக் கொண்டு செல்லும் அந்த காட்சியை பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

இந்த திரைப்படத்திற்கு பின்னர் அவர் ஹிந்தி திரைப்படங்களிலும், மகாபாரதம் என்ற சீரியலில் பீமன் கதாபாத்திரத்திலும் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், விளையாட்டிலும் அதிக ஆர்வம் கொண்டவர். ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்று இவர் பல பதக்கங்கள் பெற்று உள்ளார்.

மேலும் அவர் சினிமா, விளையாட்டு இவற்றை தொடர்ந்து அரசியலிலும் களம் புகுந்தார். ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த அவர் 2013ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். அதன்பிறகு அவர் பாஜகவில் இணைந்து பணியாற்றினார். ஒரு அரசியல் பிரபலமாக வலம் வந்த அவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் நடிகர் பிரவீன் குமார் தன்னுடைய 75 வது வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த செய்தி தமிழ் ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவரின் இறப்புக்கு பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

praveen kumar sobti
praveen kumar sobti

சமீபத்தில் தான் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இந்த சோகத்தின் தாக்கம் நீங்குவதற்குள்ளாகவே திரையுலகம் மற்றொரு இழப்பை சந்தித்துள்ளது. அவரின் மறைவால் வாடும் அவர் குடும்பத்திற்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்