சர்வதேச விருது பெற்ற ஆர்யா பட நடிகை.. குவியும் வாழ்த்துக்கள்.

முன்னணி இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வரும் சமுத்திரக்கனி நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான சாட்டை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மகிமா நம்பியார். இப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த மற்றொரு புதுவரவான மகிமா நம்பியார் அதனைத் தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடிக்க தொடங்கினார்.

சாட்டை படத்தை தொடர்ந்து தமிழில் குற்றம் 23, அசுரகுரு, இரவுக்கு ஆயிரம் கண்கள், கொடிவீரன், மகாமுனி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மகிமாவிற்கும் ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மகிமாவிற்கு சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான மகாமுனி படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் மகிமா நம்பியார், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

மேலும் இப்படம் சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை குவித்து வந்தது. இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மகிமா நம்பியாருக்கு மேட்ரிட் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. இதனை அவரே தனது சமூக வலைத்தத்தில் பகிர்ந்து உள்ளார்.

mahima nambiar
mahima nambiar

இதுகுறித்து மஹிமா நம்பியார் கூறியுள்ளதாவது, “மேட்ரிட் சர்வதேச திரைப்பட விழாவில் மகாமுனி படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. இயக்குனர் சாந்தகுமார், நடிகர் ஆர்யா, நடிகை இந்துஜா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோருக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்