கார்த்திக் போல் மாறும் மகேஷ்.. மாட்டிக்கொண்டு முழிக்க போகும் அன்பு ஆனந்தி

Singapennae Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியலில் கடந்த பல மாதங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்து மக்களின் பேவரிட் நாடகமாக இருப்பது சிங்க பெண்ணே சீரியல். இதில் அன்பு என்கிற கதாபாத்திரம் எதார்த்தமான நடிப்பையும் மக்களை கவரக்கூடிய வகையில் இருப்பதால் தொடர்ந்து இவருக்காக இந்த நாடகம் வெற்றி நடை போட்டு வருகிறது.

இதே மாதிரி இன்னொரு பக்கம் மகேஷ் நடிப்புக்கும் அழகுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்து விட்டார்கள். அதனால் இவர்கள் இருவருடைய நடிப்பை பார்ப்பதற்காகவே இந்த நாடகத்துக்கு பேர் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அப்படிப்பட்ட இவர்கள் இருவரும் ஆனந்தியை உயிர்க்கு உயிராக காதலித்து வருகிறார்கள்.

அன்பு ஆனந்தி வாழ்க்கையில் குறுக்கிடும் மகேஷ்

அந்த வகையில் யாருடைய காதல் ஜெயிக்கப் போகிறது என்பதை பார்க்க ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் அன்பு, அழகனாக ஆனந்தி மனதை கவர்ந்து விட்டார். ஆனால் நான் தான் அழகன் என்று அன்பு சொல்லவரும் ஒவ்வொரு தருணத்திலும் ஏதாவது ஒரு இடைஞ்சல்கள் வந்து ஆனந்தியிடம் சொல்ல முடியாமல் போய்விடுகிறது.

இந்த சூழ்நிலையில் மகேஷ் அவருடைய காதலை தெரியப்படுத்தும் விதமாக ஆனந்தியின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடுகிறார். இதில் இவருடைய காதலை வெளிப்படுத்தும் விதமாக சில விஷயங்கள் நடக்கப் போகிறது. ஆனால் அதற்குள் ஆனந்தியின் அப்பா ஒரு காதல் எந்த அளவிற்கு குடும்பத்தை ரணகளம் படுத்தும் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக அவருடைய மகன் செய்த காரியத்தை சொல்லுகிறார்.

இதனால் மகேஷ் மற்றும் அன்பு அவருடைய காதலை சொல்ல முடியாமல் போய்விட்டது. ஆனாலும் கடைசியில் ஆனந்தி மனதில் அழகனாக அன்பு இடம் பிடித்து விடுவார். இதை தெரிந்து கொண்ட மகேஷ் வில்லனாக மாறப் போகிறார். அதாவது ஆரம்பத்தில் ஹீரோவாக ஜொலித்து வந்த மகேஷ் அன்புவின் செயல்களால் ஆனந்தியை கல்யாணம் பண்ணுவதற்கு பல தில்லாலங்கடி வேலைகளை பண்ணப் போகிறார்.

அதாவது சுந்தரி சீரியலில் ஆரம்பத்தில் கார்த்தி கேரக்டர் பார்ப்பதற்கு சுவாரசியமாக அமைந்தது. ஆனால் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சுந்தரியை கல்யாணம் பண்ணிவிட்டார். இதனால் மறைமுகமாக தனக்கு பிடித்த வாழ்க்கையை தேடிக் கொள்ள வேண்டும் என்று அணுவை காதலித்து கல்யாணம் பண்ணினார். பிறகு இந்த விஷயத்தை குடும்பத்தில் இருந்து மறைப்பதற்காக கொஞ்சம் கொஞ்சமாக நெகட்டிவ் ஆக மாறினார்.

தற்பொழுது மொத்தமாக வில்லன் என்ற போர்வைக்குள் கார்த்திக் ஓவராக ஆட்டம் போட்டு வருகிறார். அதே மாதிரி சிங்க பெண்ணே சீரியலில் மகேஷ் கேரக்டரும் கொஞ்சம் கொஞ்சமாக நெகட்டிவ் ஆக மாறி ஒரு வில்லனாக கொண்டு வந்து கதை நகரப் போகிறது. இதில் கடைசியில் பலிகாடாக சிக்கித் தவிக்க போவது அன்பு மற்றும் ஆனந்தியின் வாழ்க்கை தான்.

ஆனந்தியை அன்பு கல்யாணம் பண்ணக்கூடாது என்ற விஷயத்தில் மகேஷ் பல சதிகளை செய்து வாழ்க்கையை கேள்விக்குறியாக ஆக்கப் போகிறார். இதற்கிடையில் மகேஷ்சை எப்படியாவது கல்யாணம் பண்ண வேண்டும் என்று நினைக்கும் மித்ராவின் திட்டங்களும் ஆனந்திக்கு எதிராக அமையப்போகிறது.

சிங்க பெண்ணே சீரியலில் நடந்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -