அரைச்ச மாவையே அரைக்கும் சிங்கப்பெண்ணே.. சீக்கிரம் சுபம் போட்டுட வேண்டியது தான்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியல் பெரிய அளவில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. கடந்த மாதம் முழுக்க நந்தாவை போலி அழகானக கொண்டு வந்து கதையை ஓட்டினார்கள். நந்தாவை பற்றிய உண்மை தெரிந்ததும் அன்பு மற்றும் ஆனந்தி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள அதிக வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது.

அரைச்ச மாவையே அரைக்கும் சிங்கப்பெண்ணே

அதற்கும் ஆப்பு வைக்கும் விதமாக மகேஷை உள்ளே கொண்டு வந்து மொத்தமாக சொதப்பி கொண்டிருக்கிறார்கள். மகேஷ் மலைக்கோயிலுக்கு வந்ததே ரசிகர்கள் எதிர்பார்க்காத திருப்பம் தான். அது மட்டும் இல்லாமல் தற்போது ஆனந்தி பிறந்த நாளுக்கு அன்பு போட்டு வைத்த திட்டத்தில் மகேஷை தேவையில்லாமல் நுழைத்து இருக்கிறார்கள்.

ஆனந்தியின் குடும்பத்தை அழைத்து கொண்டு காரில் வந்து ஹாஸ்டலில் இறங்குவது போன்ற ப்ரோமோ பார்க்கும் போதே பிபி ஏறுகிறது. இனி மகேஷை வைத்து முழுக்க கன்டென்டை ஓட்ட போகிறார்கள் என்பது நல்லாவே தெரிகிறது.

இது சிங்கப்பெண்ணே சீரியல் ரசிகர்களுக்கு ஒரு வித சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இனியும் அன்பு தான் அழகன் என்று ஆனந்திக்கு தெரியாத மாறி காட்டி கொண்டு வந்தார்கள் என்றால், மக்கள் இந்த சீரியலை வெறுத்து விடுவார்கள்.

கிராமத்தில் இருந்து சென்னைக்கு வரும் பெண் எந்த மாதிரி சிக்கலை சந்திக்கிறாள், அதிலிருந்து மீண்டு வருகிறாள் என்பது தான் இந்த சீரியலின் அடித்தள கதை. அதற்காக தான் சிங்கப்பெண்ணே சீரியல் ஒரு காலத்தில் கொண்டாடப்பட்டது.

ஆனால் கதை நகரும் போக்கு கதையின் ஹீரோயின் ஆனந்தியை வெறுக்க வைத்து விட்டது. இனியும் இயக்குனர் முழித்து கொள்ளவில்லை என்றால் சீக்கிரம் சிங்கப்பெண்ணே சீரியலுக்கு சுபம் போட வேண்டி வரும்.

சமீபத்தில் சிங்க பெண்ணில் நடந்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -