10 நாளில் பல கோடிகளை வாரி சுருட்டிய மகாராஜா.. சம்பள விஷயத்தில் பெரிய மனுசனாக நடந்து கொண்ட விஜய் சேதுபதி

Vijay Sethupathi: விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 14ஆம் தேதி மகாராஜா வெளியானது. அவருடைய 50வது படம் என்ற பெருமையுடன் வெளிவந்த இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூலிலும் கெத்துக்காட்டி வருகிறது.

அதிலும் படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு வழக்கத்தை விட அருமையாக இருக்கிறது என்ற பாராட்டுக்கள் நாலா பக்கமும் குவிந்து வருகிறது. அந்த வகையில் மகாராஜா 10 நாளில் 70 கோடி வரை வசூலித்துள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் சேதுபதி இப்படி ஒரு தரமான வெற்றியை ருசித்துள்ளார். ஏனென்றால் கடந்த சில படங்கள் அவருக்கு பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை. அதிலும் வில்லன், கேரக்டர் ரோல் என இவர் வெரைட்டியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார்.

அதை வைத்துப் பார்க்கும்போது மீண்டும் ஹீரோவாக அவர் ஜெயித்து காட்டி இருக்கிறார். அது மட்டும் இன்றி மகாராஜா படத்திற்காக அவர் சம்பளத்தை கூட குறைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அதாவது தற்போது விஜய் சேதுபதியின் சம்பளம் 25 கோடியாக உள்ளது.

விஜய் சேதுபதியின் சம்பளம்

ஜவான் படத்திற்காக இந்த சம்பளத்தை தான் அவர் வாங்கியிருந்தார். ஆனால் மகாராஜாவுக்காக 10 கோடி சம்பளம் மட்டுமே அவர் வாங்கியதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது. ஏனென்றால் தயாரிப்பாளரின் சிரமத்தை பார்த்து அவர் இப்படி ஒரு முடிவை எடுத்தாராம்.

ஆனால் உண்மையில் படம் வெளியாகி நல்ல வசூலை பெற்ற பிறகு முழு சம்பளத்தை வாங்கிக் கொள்வதாக அவர் கூறியிருக்கிறார். ஒருவேளை படம் நஷ்டம் என்றால் கூட விஜய் சேதுபதி தயாரிப்பாளரை கஷ்டப்படுத்தி இருக்க மாட்டார்.

ஏனென்றால் பல படங்களில் அட்வான்ஸ் தொகையை மட்டும் வாங்கிக் கொண்டு நடித்துக் கொடுத்ததாக அவரே ஒருமுறை மேடையில் தெரிவித்திருக்கிறார். அப்படி இருக்கும்போது தற்போது மகாராஜா மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டையாடியதால் தயாரிப்பாளர் நிச்சயம் 25 கோடியை தாண்டி சம்பளத் தொகையை கொடுத்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் காந்தி டாக்ஸ், விடுதலை 2 ஆகிய படங்கள் வெளிவர காத்திருக்கின்றன. இதில் காந்தி டாக்ஸ் எப்போதோ வெளிவந்திருக்க வேண்டியது. சில பிரச்சனைகளின் காரணமாக இழுத்தடித்து வரும் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஜாவால் எகிறிய விஜய் சேதுபதியின் மார்க்கெட்

Next Story

- Advertisement -