சிங்கப்பெண்ணில் அன்புவை நேசிக்க ஆரம்பிக்கும் ஆனந்தி.. ஆட்டையை கலைக்க ரெடியான மகேஷ்

Singapenne: சன் டிவியின் சிங்க பெண்ணே சீரியலில் இத்தனை வாரம் ரசிகர்கள் புலம்பித் தவித்தது இயக்குநர் காதுக்கு கேட்டு விட்டது போல. திங்கட்கிழமையில் இருந்தே அன்பு மற்றும் ஆனந்தியின் அழகான காதல் காட்சிகளை வைத்து ரசிகர்களை குஷிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

நந்தா போலி அழகனாக வந்த போதே ஆனந்தி அன்புவை புரிந்து கொண்டு அவனுடன் சேர வேண்டும் என்பதுதான் அந்த நாடகம் பார்ப்பவர்களின் ஆசையாக இருந்தது. கிட்டத்தட்ட அது நடக்கும் நேரத்தில் இடையில் மகேஷ் வந்து ஆட்டையை கலைத்துக் கொண்டிருக்கிறான்.

நேற்றைய எபிசோடும் முழுக்க அன்பு ஆனந்தியின் குடும்பத்தோடு வெளியில் ஜாலியாக சுற்றுவது போல் காட்டப்பட்டது. அதுவும் ஆரம்பத்தில் இவர்கள் இருவருக்கும் டூயட் சாங் வைத்து வேற லெவல் பண்ணி விட்டார்கள்.

அதன் பின்னர் குடும்பத்துடன் ரொம்பவும் சந்தோஷமாக ஹாஸ்டலுக்கு ஆனந்தி வந்து விடுகிறாள். ஆனந்தியின் பிறந்தநாளுக்கு முதலில் யார் வாழ்த்து தெரிவிப்பது என்பது அடுத்த பிரச்சனையாக இருக்கிறது.

மூக்கு வேர்த்தது போல வேலையை ஆரம்பிக்கும் மகேஷ்

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மகேஷுக்கு முன்னாடியே அன்பு போன் செய்து ஆனந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி விடுகிறான். கரெக்டாக மகேஷ் போன் செய்தபோது வழக்கம் போல ஆனந்தி நீங்கதான் எனக்கு இரண்டாவது வாழ்த்து தெரிவித்தவர் என்று உளறி விடுகிறாள்.

அப்போ முதல் வாழ்த்து சொன்னது யார் என ரொம்பவும் கோபத்துடன் மகேஷ் கேட்கிறான். இந்த ப்ரோமோ மூலம் அடுத்து மகேஷ் அன்பு மற்றும் ஆனந்தியின் காதல் வாழ்க்கையில் பிரச்சனை பண்ணப் போகிறான் என்பது நன்றாகவே தெரிந்து விட்டது.

அதிலும் அன்புக்கு மகேசு உடன் ஒரு நல்ல நட்பு இருப்பதால் அவன் மனது காயப்படும் அளவுக்கு ஏதும் செய்யக்கூடாது எனவும் யோசிக்க வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் ஆனந்தியும் மகேசை மீறி எந்த விஷயத்தையும் செய்யாதவள்.

இதனால் மீண்டும் மகேசுக்காக தன்னுடைய காதலை தியாகம் செய்கிறேன் என அன்பு முடிவெடுத்தாலும் அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. இதற்கெல்லாம் முடிவு கட்ட அன்பு தான் அந்த அழகன் என்ற உண்மை தெரிந்தால் மட்டும் தான் சரியாக இருக்கும்.

Next Story

- Advertisement -