லைகா கைவசம் இவ்வளவு படங்களா..? ரஜினி170க்கு முன் செய்யப்போகும் தரமான சம்பவம்

2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட லைகா புரொடக்சன்ஸ் இப்போது 2022ல் கோலிவுட்டில் கொடி கட்டி பறந்து வருகிறது. தமிழ் சினிமா உலகின் கனவு படமான பொன்னியின் செல்வனை மெட்ராஸ் டாக்கீஸுடன் இணைந்து தயாரித்தது லைகா. பொன்னியின் செல்வன் வரும் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

லைகா முதன் முதலில் ஞானம் பிலிம்ஸ் என்ற பெயரில் 2008 ஆம் ஆண்டு பிரிவோம் சிந்திப்போம் படத்தை தயாரித்தது. அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு லைகா ப்ரொடக்சன் என்ற பெயரில் அய்யங்காரன் இன்டர்நெஷனல் மூவிஸுடன் இணைந்து 2014 ஆம் ஆண்டு தளபதி விஜயின் கத்தி படத்தை தயாரித்து தன்னுடைய பயணத்தை ஆரம்பித்தது.

Also Read: பொன்னியின் செல்வனுடன் மோதவிருக்கும் 2 பிரபலங்கள்.. தமிழனுக்கு தமிழனே சப்போர்ட் பண்ணலைனா எப்படி ?

பின்னர் கோலமாவு கோகிலா, செக்கச்சிவந்த வானம், வட சென்னை, காப்பான் என அடுத்தடுத்து பெரிய ஹிட் படங்களை தயாரித்தது. இப்போது இந்த நிறுவனம் தமிழ் திரைப்பட உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

லைகா 2022ல் பட தயாரிப்பில் கொடி கட்டி பறந்து வருகிறது என்றே சொல்லலாம். லைக்காவின் கைவசம் இப்போது இந்த ஆண்டுக்கு மட்டுமே மொத்தம் 8 படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு காத்திருக்கின்றன. இதில் ஒன்று சூப்பர் ஸ்டாரின் 170 வது படம் ஆகும்.

Also Read: 10 நிமிட காட்சிக்காக கமல் செய்த சாதனை.. ஆச்சரியமாய் பார்த்த சங்கர்

மாஃபியா: அத்தியாயம் 1, பன்னி குட்டி, ராங்கி, குட்லக் ஜெர்ரி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2 என அடுத்தடுத்து படங்கள் ரெடியாகி கொண்டிருக்கின்றன. இதில் உலக நாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 படமும் ஒன்று. லைகா இப்போது அடுத்தடுத்து இந்த படங்களை எல்லாம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறது.

இதற்கு காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 வது படம் தான். முதலில் இந்த சின்ன சின்ன படங்களை எல்லாம் ரிலீஸ் செய்து முடித்தால் தான், தலைவரின் படத்தில் கவனம் செலுத்த முடியும் என இந்த நிறுவனம் பிளான் போட்டுள்ளது. இந்த படத்தை டான் பட இயக்குனர் சிபி இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Also Read: ரிலீசுக்கு முன்னரே கோடிகளை வாரிக் குவிக்கும் பொன்னியின் செல்வன்.. அக்கட தேசத்தை பதம்பார்க்கும் மணிரத்தினம்

Next Story

- Advertisement -