10 நிமிட காட்சிக்காக கமல் செய்த சாதனை.. ஆச்சரியமாய் பார்த்த சங்கர்

கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு கமலின் இந்தியன் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இருக்கிறது. படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து மற்றும் கொரோனா பரவல் காரணாமாக இந்த படத்திற்கான சூட்டிங் வேலைகள் நிறுத்தப்பட்டு இருந்தன.

இந்நிலையில் செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் இந்த படத்துக்கான சூட்டிங் வேலைகள் ஆரம்பித்து இருக்கின்றன. கமலஹாசனும் இந்த படத்தில் இப்போது கலந்து கொண்டிருக்கிறார். இடைப்பட்ட இந்த கால இடைவெளியில் கமல் விக்ரம் படம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய ஹிட் அடித்தது.

Also Read: ஷங்கருக்கு தோள் கொடுத்து தூக்கி விடும் இயக்குனர்கள்.. வேகமெடுக்கும் இந்தியன் 2

கமலஹாசன் நடிப்பு மட்டுமல்ல கதை, திரைக்கதை, நடனம், இயக்கம், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர். அதே போல் பல லாங்குவேஜ் பேசுவதிலும் தேர்ந்தவர். இப்போது இந்தியன் படத்திற்காக ஒரே டேக்கில் அதாவது 10 நிமிடத்தில் 14 மொழிகளில் பேசி இருக்கிறார். இந்த தகவல் இப்போது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.

இதனிடையே இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம் சரணை வைத்து RC 15 என்னும் படத்தை இயக்கி வருகிறார். எனவே இப்போது ஷங்கர் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் வேலை செய்யும் கட்டாயம் ஏற்பட்டு உள்ளதால் அவரிடம் உதவி இயக்குனர்களாக இருந்த வசந்தபாலன், சிம்பு தேவன், அறிவழகன் ஆகியோரை இந்தியன் 2 படம் முழுக்க பணியாற்ற வைக்கிறார்.

Also Read: 4 வருடங்களுக்குப் பிறகு ஃபுல் ஃபார்மில் இறங்கிய ஷங்கர்.. ஒரே நேரத்தில் இரட்டை சவாரி

லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் ரிலீஸ் செய்கிறது. இந்த படத்தில் ராகுல் ப்ரீத் சிங், சமுத்திர கனி. பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் முந்தைய சூட்டிங்கில் காஜல் அகர்வால் ஏற்கனவே நடித்து முடித்துவிட்டார்.

இந்த படம் ஜனவரியில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் ஆறும் வரும் அக்டோபர் ஆறாம் தேதியில் தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ கடந்த வாராம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Also Read: இந்தியன் 2 படத்தில் சிக்கலை ஏற்படுத்திய சிபிஐ கேரக்டர்.. ஷங்கரை காப்பாற்றிவிட்ட நடிகர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்