100% ப்ரொபஷனல் சாரே.! மணிரத்தினம், ஷங்கரை மிரளவிடும் லோகேஷ்

Lokesh Kanagaraj: சினிமாவில் பழம் தின்று கொட்டை போட்ட இயக்குனர்கள் இருந்தாலும் குறுகிய காலத்திலேயே அவர்களை ஓரம்கட்டி விட்டார் இயக்குனர் லோகேஷ். அனுபவம் வாய்ந்த இயக்குனர்கள் கூட இவரது முன்னாள் தோற்றுப் போய் விடுவார்கள். அந்த அளவுக்கு நூறு சதவீதம் ப்ரொபஷனலாக செயல்பட்டு வருகிறார்.

அதாவது ஒரு சிறந்த இயக்குனர் என்பதற்கு எடுத்துக்காட்டு சரியான பட்ஜெட் மற்றும் கால்ஷீட் கணக்கிட்டாலே கிட்டதட்ட 90% வெற்றிதான். இதில் பெரும்பாலான இயக்குனர்கள் சொதப்பி விடுவார்கள். அதாவது அவர்கள் சொன்ன பட்ஜெட்டை விட பல மடங்கு அதிகமாகி தயாரிப்பாளருக்கு நெருக்கடியை கொடுத்து விடுவார்கள்.

Also Read : வேகம் எடுக்கும் தளபதி 68.. ஒன்று கூடும் ஜாம்பவான்கள், அரண்டு போன லோகேஷ்

மேலும் சிலர் நடிகர், நடிகைகளின் கால்ஷீட் அதிகமாக கேட்டு இதனால் படத்தின் ரிலீஸ் தேதி தாமதமாக வாய்ப்பு இருக்கிறது. தமிழ் சினிமாவில் பல வருடங்களாக பயணித்து வரும் மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோரையே மிரள விட்டிருக்கிறார் லோகேஷ். அதாவது ஷங்கர் பல வருடமாக இந்தியன் 2 படத்தை எடுத்து வருகிறார்.

ஏதாவது ஒரு பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. மற்றொருபுறம் மணிரத்தினம் படத்திலும் காலதாமதம் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் லோகேஷ் ஒவ்வொரு படத்தின் பூஜையின் போதே ரிலீஸ் தேதியை அறிவித்து விடுகிறார். அதுவும் லியோ படத்தின் பூஜை போது அக்டோபர் 19 வெளியாகும் என அறிவித்தார்.

Also Read : விஜய், அர்ஜுனுக்கு சமுதாயத்தின் மேல் அக்கறை இல்லை.. லோகேஷ் மேல் பாய்ந்த ப்ளூ சட்டை மாறன்

அதன்படி படப்பிடிப்பு தொடங்கியப்பட்ட முதல் நாளில் இருந்து சென்சார் வரை சரியாக கணக்கு போட்டு படத்தை சொன்னபடி ரிலீஸ் செய்ய இருக்கிறார். அதுவும் இந்த படத்தை எடுத்து முடிப்பதற்குள் விஜய் ரசிகர்கள் மற்றும் லோகேஷ் ரசிகர்கள் அப்டேட் கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்தனர்.

போதாக்குறைக்கு விஜய் மற்றும் லோகேஷ் இடையே பிரச்சனை என புரளியையும் கிளப்பி விட்டிருந்தனர். ஆனால் லோகேஷை பொறுத்தவரையில் எதையும் கண்டுகொள்ளாமல் சிறப்பான சம்பவத்தை செய்து முடித்திருக்கிறார். இதுவே லியாவுக்கு கிடைத்த முதல் வெற்றி என்று சொல்லலாம். அடுத்ததாக படத்தில் என்ன சம்பவம் செய்திருக்கிறார் என்பது லியோ படம் வெளியானால் தெரியவரும்.

Also Read : சாதி சம்மந்தமான படத்தில் விஜய் நடிப்பாரா?. கதை தயார் செய்து வைத்திருக்கும் தனுஷ் பட இயக்குனர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்