சைக்கோ மாதிரி மாறி பிளாக் மெயில் பண்ணும் சீமாட்டி.. பாக்யாவிடம் கையும் களவுமாய் மாட்டும் செழியன்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது குவா சத்தம் கேட்கும் நேரம் வந்துவிட்டது. அதாவது கிட்டத்தட்ட நாலு வருஷமாக கர்ப்பமாக இருந்தார் ஜெனி. அந்த வகையில் தற்போது இவருக்கு பிரசவ வலி வந்ததால் மருத்துவமனையில் சேர்த்தார்கள். அப்பொழுது அனைவரும் வாசலில் இருந்து ரொம்பவே டென்ஷனாக காத்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த நேரத்தில் டாக்டர் ஜெனிக்கு நல்லபடியாக பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று சொல்கிறார். உடனே அனைவரும் சந்தோஷத்தில் இருக்க கோபி உணர்ச்சிவசப்பட்டு செழியனை அப்படியே தூக்கி சுற்றி கொண்டாடுகிறார். அவரும் அப்பாவாகி விட்டோம் என்ற மகிழ்ச்சியுடன் ஜெனியை பார்க்கப் போகிறார்.

Also read: பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு பூசணிக்காய் உடைக்க நேரம் வந்தாச்சு.. மீனாவின் சந்தேகத்தால் வரப்போகும் விடிவுகாலம்

இதற்கிடையில் செழியனுக்கு அவ்வப்போது மாலின் இடமிருந்து போன் வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் செழியன் அந்த போனை பற்றி கண்டுகொள்ளாமல் கட் பண்ணி விடுகிறார். தொடர்ந்து மாலினி கால் பண்ணிக் கொண்டே இருந்தார். ஆனால் செழியன் எடுக்கவே இல்லை என்பதால் வாய்ஸ் மெசேஜ் பண்ணி அனுப்புகிறார்.

இதை கேட்ட செழியன் ரொம்பவே அதிர்ச்சியாகிறார். அதில் அவர் கூறியது இப்பொழுது உடனே நீ என்னை பார்க்க வரவில்லை என்றால் நான் என் கையை அறுத்துக் கொல்வேன் என்று சைக்கோ மாதிரி பிளாக் மெயில் பண்ணி பேசி அனுப்பி இருக்கிறார். இதை இவர் மட்டும் கேட்காமல் பின்னாடியில் இருந்து பாக்யாவும் கேட்டு விடுகிறார்.

Also read: கிடைச்ச கேப்பில் கிடா வெட்டிய வேல ராமமூர்த்தி.. குணசேகரன் கேரக்டருக்கு என்ட்ரி கொடுக்கப் போகும் அண்ணன்

இப்பொழுது பாக்யாவிடம் கையும் களவுமாக செழியன் மாட்டிக்கொண்டார். இதன் பின் நடந்த அனைத்து உண்மைகளையும் தன் அம்மாவிடம் மறைக்காமல் சொல்லப் போகிறார். இதற்கு மேற்கொண்டு முடிவு கட்டும் வகையில் பாக்யா ஒரு தரமான செயலை செய்து மாலினி இடம் இருந்து செழியினை பிரிக்கப் போகிறார்.

பொதுவாக சொல்வார்கள் அப்பனைப் போல் பிள்ளை என்று. அதுபோல அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் இருக்கிறார் செழியன். கோபியை போல செழியனுக்கும் ரெண்டு பொண்டாட்டி மேல ஆசை வந்துடுச்சு. ஆனால் இந்த விஷயம் இப்போது பாக்கியாவுக்கு தெரிந்ததால் இதற்கு கண்டிப்பாக முற்றுப்புள்ளி வைத்து செழியனை காப்பாற்றி விடுவார்.

Also read: பாக்கியலட்சுமியில் சக்களத்தி சண்டை விட மோசமாக இருக்கும் போல.. எழிலின் தலையில் இடியை இறக்கிய அமிர்தா

- Advertisement -