ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

கிடைச்ச கேப்பில் கிடா வெட்டிய வேல ராமமூர்த்தி.. குணசேகரன் கேரக்டருக்கு என்ட்ரி கொடுக்கப் போகும் அண்ணன்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டர் இப்போதைக்கு இல்லாததால் பார்ப்பவர்களின் விறுவிறுப்பு குறைய கூடாது என்பதற்காக கதைகளை சுவாரஸ்யமாக எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் அவ்வப்போது குணசேகரனின் முகத்தை காட்டாமல் வெறும் காலை மட்டும் காட்டிக்கொண்டு இந்த வரார் இப்பொழுது வந்து விடுவார் என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள்.

அத்துடன் ரசிகர்களும் குணசேகரன் கேரக்டருக்கு புதிதாக யார் வரப் போகிறார் என்று ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இவருடைய கேரக்டருக்கு ஆர்டிஸ்ட் வேல ராமமூர்த்தி வந்தால் பொருத்தமாக இருக்கும் என்று பலரும் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள். இதனால் சன் டிவி நிர்வாகியும் இவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

Also read: குணசேகரன் கேரக்டருக்கு பொருத்தமான ஆளு கிடைக்கலை.. புது ட்விஸ்ட் உடன் வரப்போகும் எதிர்நீச்சல் சீரியல்

ஆனால் வேலராமமூர்த்தி படங்களில் பிசியா கமிட் ஆகி இருப்பதால் இப்போதைக்கு என்னால் எதுவும் சொல்ல முடியாது என்று இழுத்தடித்துக் கொண்டே வந்தார். ஆனால் யாரை எப்படி மடக்குவது என்று சன் டிவி நிறுவனத்திற்கு நல்லாவே தெரியும். அதனால் குணசேகரன் கேரக்டரில் நடிப்பதற்கு அதிகமான சம்பளத்தை கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.

இதை கேட்டதும் இதுதான் சான்ஸ் என்று கிடைத்த கேப்பில் கிடா வெட்ட தயாராகி விட்டார். அந்த வகையில் அதிகமான சம்பளத்தை காட்டியதால் தற்போது மேலராமமூர்த்தி குணசேகரன் கேரக்டரில் நடிப்பதற்கு அவருடைய முழு சம்மதத்தையும் கொடுத்துவிட்டார். இதனால் புதிதாக ஆதி குணசேகரன் கேரக்டருக்கு மாஸ் என்ட்ரியுடன் கூடிய விரைவில் வேலராமமூர்த்தி வர இருக்கிறார்.

Also read: இந்தாம்மா ஏய், மருமகள்களுக்கு ஆப்படிக்க வரும் புது குணசேகரன்.. பிபி-யை எகிற வைக்கும் எதிர்நீச்சல்

இதற்கான அனைத்து வேலைகளும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதாவது குணசேகரன் கேரக்டருக்கு ஏற்ற மாதிரி அவரை மாற்றிக் கொண்டு வருகிறார்கள். இதற்கான சூட்டிங் சீக்ரெட்டாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இவருடைய நடிப்பு எப்படி இருக்கும் என்று நாம் அனைவரும் இவருடைய படங்களிலே பார்த்திருப்போம்.

ஆளான பட்ட குணசேகரனுக்கு அண்ணனாக இவர் இருப்பதால் இவரை விட பல மடங்கு நடிப்பிலும் பேச்சிலும் மக்களை ஈசியாகவே கவர்ந்து விடுவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அத்துடன் நாடகத்துக்கு ஏற்ற மாதிரி கதையும் இவரால் இன்னும் சுவாரஸ்யமாக மாறிவிடும். இதற்கிடையில் கதிர் மற்றும் ஞானம் அந்த வீட்டில் இருக்கும் பெண்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஒவ்வொரு அராஜகத்தையும் செய்து வருகிறார்கள்.

Also read: குணசேகரன் இல்லாத குறையை தீர்க்க வரும் பொம்பள ரவுடி.. எவ்வளவு முடியுமோ உருட்டுங்க நாங்க வெயிட் பண்றோம்

- Advertisement -

Trending News