வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு பூசணிக்காய் உடைக்க நேரம் வந்தாச்சு.. மீனாவின் சந்தேகத்தால் வரப்போகும் விடிவுகாலம்

Pandian Stores: விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் கிளைமாக்ஸ் காட்சியை நோக்கி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த தொடர் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது.

அதாவது மீனாவின் அப்பாவை கொலை முயற்சி செய்ததாக கதிர் மற்றும் ஜீவா இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இப்போது மீனாவுக்கும் தனது அப்பாவை கொல்ல முயற்சி செய்தது கதிர் தான் என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. உண்மையான குற்றவாளி ஜனார்த்தனனின் இளைய மருமகன் பிரசாந்த் தான்.

Also Read : ஜீவானந்தம் உன் புருஷனா இருந்தா நல்லா இருக்குன்னு சொன்னல.. கன்னத்தை பழுக்க வைத்த குணசேகரனின் பொண்டாட்டி

இந்த சூழலில் இப்போது மீனாவுக்கு சந்தேகம் பிரசாந்த் மீது ஏற்பட்டிருக்கிறது. அதாவது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் ஜனார்த்தனனை மீனா தான் இரவு, பகல் பாராமல் பார்த்து வருகிறார். அந்த சமயத்தில் ஜனார்த்தனனின் அறைக்குள் பிரசாந்த் சென்று கொலை முயற்சி செய்ய முற்படுகிறார்.

அதற்குள் மீனா அங்கே வந்தவுடன் சும்மா மாமாவை பார்க்க வந்தேன் என்று சமாளித்துவிட்டு செல்கிறார். அதன் பிறகு மீனா தனது தந்தையிடம் பிரசாந்த் ஏன் இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று விசாரிக்கிறார். அதற்கு அவரும் பிரசாந்த் இப்போது பூரண குண பெற்றாலும் மருத்துவமனையிலேயே இருக்கிறார் ஏன் என்று தெரியவில்லை என்று கூறுகிறார்.

Also Read : கிடைச்ச கேப்பில் கிடா வெட்டிய வேல ராமமூர்த்தி.. குணசேகரன் கேரக்டருக்கு என்ட்ரி கொடுக்கப் போகும் அண்ணன்

இது மீனாவுக்கு சந்தேகத்தை அதிகப்படியாக ஆக்கியுள்ளது. மேலும் மீண்டும் ஜனார்த்தனன் அறைக்குள் பிரசாந்த் போவதை மீனா கண்காணிக்கிறார். இதனால் கண்டிப்பாக மீனா மூலமாகவே பிரசாந்த் தான் உண்மையான குற்றவாளி என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரவுள்ளது.

அதன் பிறகு கதிர் மீது எந்த தவறும் இல்லை என்பதை உணர்ந்து மீனா மன்னிப்பு கேட்க உள்ளார். ஆகையால் விரைவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு பூசணிக்காய் உடைக்க இருக்கிறார்கள். மீண்டும் அண்ணன், தம்பி நால்வரும் ஒன்றாக இணைந்து சந்தோஷமாக இருக்கும் காட்சியுடன் சுபம் போடப்பட உள்ளது.

Also Read : பிக் பாஸ் வீட்டை நாலாக பிளக்க போகும் 20 போட்டியாளர்கள் இவர்கள்தான்.. மூர்த்தியின் தம்பியை தூக்கிய விஜய் டிவி

- Advertisement -

Trending News