நேரு ஸ்டேடியத்தை தெறிக்க விடப் போகும் லியோ பட ஆடியோ லான்ச்.. உஷாராகி தளபதி போட்டோ 5 கட்டளை

Vijay in Leo Audio Launch: எந்த அளவுக்கு ரசிகர்கள் ஒரு படத்தை பார்த்து என்ஜாய் பண்ண வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அதற்கு இணையாக ஆடியோ லான்ச் விழாவையும் ரொம்பவே ஆசையுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் விஜய், அவருடைய லியோ படத்தின் ஆடியோ லாஞ்சை மிகப் பிரம்மாண்டமாக வருகிற செப்டம்பர் 30ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் வைக்க முடிவெடுத்து இருக்கிறார்.

ஆனால் இதில் எந்தவித பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்ற காரணத்திற்காக உஷாராக ஐந்து கட்டளையை போட்டிருக்கிறார். அவர் சொன்னபடி அவருடைய மக்கள் இயக்கம் மன்றத்தில் இருப்பவர்கள் ஃபாலோ பண்ணினால் எந்தவித பிரச்சனையும் வராது என்று நினைக்கிறார். அதற்காக அவர் போட்ட முதல் கண்டிஷன் என்னவென்றால் யாருக்கெல்லாம் அழைப்பு விடுத்து இருக்கிறதோ, அவர்கள் மட்டும் உள்ளே வர அனுமதிக்க வேண்டும்.

Also read: சஞ்சய் தத் கழுத்தை ஆக்ரோஷமாக பிடித்த விஜய்.. டெவிலை சந்தித்த லியோ போஸ்டர்

அடுத்ததாக 8000 பேர் இருக்கிற மாதிரி தான் அந்த அரங்கம் இருப்பதால், அதற்கு மேல் யார் வந்தாலும் உள்ளே அனுமதி கொடுக்கக் கூடாது. அத்துடன் வேறு எந்த ஒரு சிபாரிசுடன் வந்தாலும் அவர்களுக்கும் மறுப்பு தெரிவித்து விட வேண்டும். அந்த வகையில் அரங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட அந்த நபர்கள் மட்டும்தான் வரவேண்டும் என்று தீர்க்கமாக சொல்லி இருக்கிறார்.

இதனை அடுத்து நேரு ஸ்டேடியத்தில் இருக்கும் நான்கு நுழைவாயில்களும் மற்றும் எக்ஸிட்டுகளும் எப்போதும் ஃப்ரீயாக இருக்க வேண்டும். அதில் எந்தவித குளறுபடியும் வந்துவிடக்கூடாது என்று சொல்லி இருக்கிறார். மேலும் அன்றைக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுப்பதற்காக விஜய் மக்கள் உறுப்பினர்கள் மிகவும் மும்முரமாக இருந்து சரி செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

Also read: விஜய்க்கு பாய் சொல்லிட்டு திருமணத்திற்கு ஓகே சொன்ன திரிஷா.. அக்கட தேசத்தில் இருந்து வரும் புது மாப்பிள்ளை

இதனை அடுத்து இந்த ஆடியோ லான்ச்சுக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பக்காவாக தயார்படுத்திருக்க வேண்டும். இந்த விஷயங்களில் கண்ணும் கருத்துமாக இருந்து செயல்படுத்த வேண்டும் என்று விஜய் கூறியிருக்கிறார். அதற்கு காரணம் யாருக்கும் எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக உஷாராக இருக்கிறார் விஜய்.

அத்துடன் ஆடியோ லான்ச் விழாவிற்கு, தான் என்ன பேச வேண்டும் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று முன்கூட்டியே பயிற்சி எடுத்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் கண்டிப்பாக ஆடியோ லான்ச் வேற லெவல்ல தெறிக்க விடப் போகிறார். இதை வைத்துதான் லியோ படத்தின் வெற்றி எந்த அளவிற்கு இருக்கும் என்று தீர்மானிக்க போகிறது.

Also read: எஸ்ஜே சூர்யாவை டீலில் விட்ட வெங்கட் பிரபு.. விஜய் உடன் மோத போகும் ஹாண்ட்சம் வில்லன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்