சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

விஜய்க்கு பாய் சொல்லிட்டு திருமணத்திற்கு ஓகே சொன்ன திரிஷா.. அக்கட தேசத்தில் இருந்து வரும் புது மாப்பிள்ளை

Trisha – Thalapathy Vijay: கத்திரிக்காய் முத்தினா கடத்தெருவுக்கு வந்து தான் ஆகணும் என்பது போல், திரிஷா கல்யாணத்துக்கு ரெடியாகிவிட்டார் என்ற செய்தி வந்திருக்கிறது. கிட்டத்தட்ட 35 வயதை தாண்டிய இவருக்கு எப்போ திருமணம் நடக்கும் என்று தான் சினிமா வட்டாரத்தில் அதிகமாக பேசப்பட்டது. திரிஷாவும் ஒரு சில நடிகைகளை போல் திருமணம் செய்யாமலே இருந்து விடுவார் என்று கூட அவருடைய ரசிகர்கள் நினைத்ததுண்டு.

விரைவில் த்ரிஷா வீட்டில் கெட்டி மேளம் சத்தம் கேட்க இருக்கிறது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர், தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் எல்லோருடனும் ஜோடி சேர்ந்துவிட்டார். மேலும் குறிப்பிட்ட காலகட்டத்தில் மத்த நடிகைகளுக்கு வாய்ப்பே கிடைக்காத அளவுக்கு இவர் மட்டுமே ஆட்சி செய்து வந்தார்.

Also Read: தீப்பொறியாய் அனல் பறக்கும் லியோ பட போஸ்டர்.. அக்டோபர் 19 விருந்துக்கு தயாராகும் தளபதி

அதன்பின்னர் கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கும் மேலாக த்ரிஷாவின் மார்க்கெட் மொத்தமாய் சரிந்து விட்டது. த்ரிஷா இனி அவ்வளவுதான், மீண்டும் அவரால் வரவே முடியாது. சினிமாவை விட்டு ஒதுங்கி விடுவார் என்று கூட எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த கதாநாயகிகளுக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம் ஒன்று இவருக்கு கிடைத்தது. இதுவரை தமிழ் சினிமாவில் இழந்த மார்க்கெட்டை திரும்ப பெற்ற நடிகைகள் என்று யாருமே கிடையாது.

த்ரிஷா தான் முதன் முதலில் கைவிட்டுப் போன மார்க்கெட்டை திரும்பப்பெற்றதோடு, மீண்டும் நம்பர் ஒன் நடிகை ஆக மாறி இருக்கிறார். பொன்னியின் செல்வனில் ஆரம்பித்த இவருடைய இரண்டாவது இன்னிங்ஸ் லியோ, விடாமுயற்சி, கே ஹெச் 234 என வளர்ந்து கொண்டே போகிறது. இப்போதைக்கு டபுள் டிஜிட்டில் சம்பளம் வாங்கும் ஹீரோயின் ஆக இவர்தான் இருக்கிறார்.

Also Read:லோகேஷ், லியோவுக்கே கண்டிஷன் போடும் அனிருத்.. பேராசையால் ஆடும் ஆட்டம்

மீண்டும் த்ரிஷா ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது இவருடைய திருமண செய்தி வெளி வந்து கொண்டிருக்கிறது. மலையாள திரை உலகை சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தெரிகிறது. த்ரிஷா தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவி ப்பு வெளியாகவில்லை.

லியோ படத்திற்கு பிறகு த்ரிஷா மீண்டும் நடிகர் விஜய் உடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். அதற்கு ஏற்ற மாதிரி இருவரும் வெளியில் சுற்றும் போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது. இதனால் இப்போது திருமண செய்தி வெளியானதும், அப்போ விஜய்க்கு டாட்டா காட்டிவிட்டு த்ரிஷா கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாரா என நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகிறார்கள்.

Also Read: அங்க வச்சா நான் தான் சாகணும்.. லலித்திடம் சண்டை போட்ட தளபதி, இன்னுமா ஒரு முடிவுக்கு வரல

- Advertisement -

Trending News