எஸ்ஜே சூர்யாவை டீலில் விட்ட வெங்கட் பிரபு.. விஜய் உடன் மோத போகும் ஹாண்ட்சம் வில்லன்

Thalapathy 68: விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படத்தின் எதிர்பார்ப்பை விட அடுத்ததாக தளபதி 68 காம்போ ரசிகர்களை திக்கு முக்காட செய்து வருகிறது. ஏனென்றால் விஜய்யை வைத்து லோகேஷ் தரமான சம்பவம் செய்வார் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் வெங்கட் பிரபுவின் பாணியே வேறு. தளபதி 68 எந்த மாதிரியான கதையாக இருக்கும் என்ற எண்ணம் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தில் ஆரம்பத்தில் ஜோதிகா கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. அதன் பிறகு ஜோதிகா மறுத்த நிலையில் சிம்ரன் இடம் படக்குழு சென்றதாகவும் அவரும் மறுப்பு தெரிவித்ததால் சினேகா கமிட்டாகி உள்ளார் என்ற செய்தி வந்தது. ஆனால் ஆரம்பத்திலேயே இந்த படத்தில் வில்லனாக எஸ்ஜே சூர்யா நடிக்க உள்ளார் என்று கூறப்பட்டது.

Also Read : வெற்றிமாறனின் சூப்பர் ஹிட் படத்தை பிடுங்கிய தனுஷ்.. எஸ்ஜே சூர்யா கூட்டணியில் 50வது படம்

ஏனென்றால் ஏற்கனவே விஜய்க்கு வில்லனாக மெர்சல் படத்தில் எஸ்ஜே சூர்யா நடித்து இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படத்திலும் சிம்புக்கு வில்லனாக எஸ்ஜே சூர்யா மிரள விட்டிருந்தார். இதனால் வெங்கட் பிரபு, விஜய், எஸ்ஜே சூர்யா காம்போ ரசிகர்களை கவரும் என எதிர்பார்த்த நிலையில் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

அதாவது சமீபத்தில் மார்க் ஆண்டனி படத்தில் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு அபாரமாக இருந்த போதும் தளபதி 68 படத்திற்கு வேறு ஒரு வில்லனை வெங்கட் பிரபு தேர்வு செய்துள்ளாராம். ஹீரோவாக சினிமாவில் அறிமுகமாகி தனி ஒருவன் படத்தின் மூலம் ஹாண்ட்சம் வில்லனாக மக்களின் வரவேற்பை பெற்றவர் அரவிந்த்சாமி.

Also Read : என்னோட ஸ்கிரிப்ட்ல விஜய்யா இருந்தா கூட தலையிடக்கூடாது.. 5 பேருக்கு ரூல்ஸ் போடும் லோகேஷ்

அவருடைய வித்தியாசமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்த நிலையில் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தளபதி 68 படத்தில் விஜய்க்கு வில்லனாக முதல் முறையாக அரவிந்த்சாமி நடித்தால் நன்றாக இருக்கும் என்று வெங்கட் பிரபு யோசித்து இருக்கிறார்.

மேலும் இந்த கதாபாத்திரத்திற்கும் அரவிந்த்சாமி பொருத்தமாக இருப்பார் என்று கூறப்படுகிறது. சமீபகாலமாக டாப் நடிகர்களின் படங்களில் பாலிவுட் நடிகர்கள் வில்லனாக நடித்து வரும் நிலையில் தளபதி 68 இல் அரவிந்த்சாமி நடிக்க உள்ளார் என்பதால் கண்டிப்பாக வேற லெவல் சம்பவம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து இந்த படத்தின் மற்ற விவரங்கள் லியோ ரிலீஸ்க்கு பின் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Also Read : ஒரு வழியா கழுகுக்கு நாள் குறித்த விஜய்.. மிரட்டப் போகும் லியோ ஆடியோ லான்ச்

- Advertisement -