கோவை சரளா, வடிவேலு காம்போவில் புரட்டி எடுத்த 6 படங்கள்.. பறந்து பறந்து டின்னு கட்டிய எலிசபெத்

Vadivelu Kovai Sarala Comedy: எத்தனை காலங்கள் ஆனாலும் கோவை சரளா வடிவேலு காம்போவில் வெளிவந்த படங்கள் அனைத்தும் நமக்கு பொக்கிஷமாக தான் இருக்கும். எவ்வளவு கவலைகள் இருந்தாலும் அதையெல்லாம் போக்கக்கூடிய விதமாக இவர்களுடைய நகைச்சுவை நையாண்டி அனைத்தும் சந்தோஷத்தை கொடுக்கும். அப்படி இவர்கள் காம்போவில் வெளிவந்த படங்களை பற்றி பார்க்கலாம்.

விரலுக்கேத்த வீக்கம்: எஸ் வி சேகர் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு விரலுக்கேத்த வீக்கம் திரைப்படம் வெளிவந்தது. இதில் லிவிங்ஸ்டன், வடிவேலு, விவேக், குஷ்பூ, கனகா, கோவை சரளா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் வடிவேலு கோவை சரளா கணவன் மனைவியாக நடித்திருப்பார்கள். ஆரம்பத்தில் பயந்த சுபாவமாக இருந்த கோவை சரளா போகப்போக வடிவேலுவை ரூமுக்குள் கூட்டிட்டு போய் அடிச்சு துவசம் பண்ணி இருப்பார்.

Also read: கோவை சரளா கவுண்டமணி ஜோடியாக நடித்த 5 படங்கள்.. ஜப்பானில் டாம் அண்ட் ஜெரியாக செய்த ரகளை

மாயி: சூரிய பிரகாஷ் இயக்கத்தில் 2000 ஆண்டு மாயி திரைப்படம் வெளிவந்தது. இதில் சரத்குமார், மீனா, வடிவேலு, விஜயகுமார், கோவை சரளா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் வடிவேலு டிபன் கடையில் இவருடைய அக்கப்போர் தனத்தை காட்டும் பொழுது இவரை அடக்குவதற்காக கோவை சரளா வருவார். இவரை பார்த்து வடிவேல் பயந்து கொண்டே போகையில் பறந்து பறந்து கோவை சரளா இவரை அடித்து பெரிய சம்பவத்தை ஏற்படுத்தி இருப்பார்.

காலம் மாறிப்போச்சு: எஸ் வி சேகர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு காலம் மாறிப்போச்சு திரைப்படம் வெளிவந்தது. இதில் பாண்டியராஜன், சங்கீதா, வடிவேலு, கோவை சரளா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் வடிவேலு பூச்சி மருந்து அடிக்கும் ஒருவராக இருந்து கோவை சரளாவை கல்யாணம் செய்து விடுவார். இதனால் ஒவ்வொரு நாளும் கோவை சரளா வடிவேலுவை டின்னு கட்டிக் கொண்டே இருப்பார்.

Also read: கோவை சரளாவை ஓவர்டெக் செய்ய வரும் நடிகை.. ஹீரோயின் சப்ஜெக்ட்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் அறம் இயக்குனர்

வரவு எட்டணா செலவு பத்தணா: எஸ் வி சேகர் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வரவு எட்டணா செலவு பத்தணா திரைப்படம் வெளிவந்தது. இதில் நாசர், ராதிகா, ஜெய்சங்கர், வடிவேலு, கவுண்டமணி மற்றும் கோவை சரளா நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் வடிவேலு ஆட்டோ டிரைவராக இருப்பார். அப்பொழுது சாயங்கால நேரம் வீட்டிற்கு வரும்போது கோவை சரளா அவருடைய பாணியில் விளக்கு வச்ச நேரத்துல மாமன் என்று சொல்லிக் கொண்டிருப்பார். வடிவேலு வந்து பிள்ளைகள் எல்லாம் வெளியில எப்படி இருக்கு நீ இங்க வந்து புது பொண்ணு மாதிரி மினிகிட்டு இருக்க என்று சொல்லுவார். உடனே இது என்ன ரெண்டு பக்கம் சிவப்பு என்று கேட்க அதற்கு ரோஸு பேஷன் என்று சொல்லுவார். அதற்கு வடிவேலு ஆமா இவங்க பெரிய எலிசபெத் பரம்பரை என்று சொல்லி நக்கல் அடித்து இருப்பார்.

எங்களுக்கும் காலம் வரும்: பாலரூபன் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு எங்களுக்கும் காலம் வரும் திரைப்படம் வெளிவந்தது. இதில் லிவிங்ஸ்டன், கௌசல்யா, வடிவேலு, விவேக், கரன்,கஸ்தூரி மற்றும் கோவை சரளா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் கோவை சரளா குடும்பம் பன்றி மேய்க்கும் குடும்பமாக இருக்கும். ஆனால் வடிவேலு இது தெரியாமல் கோவை சரளாவை பார்த்ததும் காதலித்து விடுவார். அதன் பின் வேறு வழி இல்லாமல் கல்யாணம் செய்த பிறகு ஒவ்வொரு நாளும் ரகளையாகத்தான் இருக்கும்.

திருப்பதி ஏழுமலை வெங்கடேசா: எஸ் வி சேகர் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு திருப்பதி ஏழுமலை வெங்கடேசா திரைப்படம் வெளிவந்தது. இதில் பிரபு, எஸ் வி சேகர், வடிவேலு, ரோஜா, ஊர்வசி, கோவை சரளா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் பணக்காரராக இருக்கும் வடிவேலுவை காதல் வலையில் சிக்கி கல்யாணம் பண்ணி அதன் பின் ரகளை செய்யும் விதமாக கோவை சரளா நடித்திருப்பார்.

Also read: மாமன்னன் படத்தில் வடிவேலு கேரக்டரில் நடிக்க இருந்த பிரபலம்.. மொத்த பிளானையும் மாற்றிய உதயநிதி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்