Tamil Cinema News | சினிமா செய்திகள்
முதல்முறையாக ஸ்விம் சூட் புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்.. மாலத்தீவை சூடாக்கிய டிரிப்
ஹோம்லி லுக்கில் வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது முதல் முதலாக ஸ்விம் சூட் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு என்று அனைத்து மொழிகளிலும் பம்பரமாக சுழன்று நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக மாமன்னன் திரைப்படத்தில் நடிக்க இருந்தார்.
ஆனால் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் முழு நேரமும் அரசியலில் ஈடுபட சென்றதால் இனி நடிக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார். அதன் பிறகு மாமன்னன் படத்தை பட குழு கிடப்பில் போட்டது. இந்நிலையில் கோலிவுட் ரசிகர்களுக்கு தாவணி மற்றும் சேலையில் தரிசனம் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ் முதல் முதலாக ஸ்விம் சூட் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அலற விட்டிருக்கிறார்.
முதல்முறையாக ஸ்விம் சூட் புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்

keerthi-suresh-1-cinemapettai
Also Read: ரொம்ப பிஸி என கால்சீட் மறுக்கும் 6 ஹீரோயின்கள்.. படமே ஓடாத நடிகை கூட அலட்டிக் கொள்ளும் அவலம்
இதைப் பார்த்த ரசிகர்களும் சோசியல் மீடியாவில் அவருடைய அழகை வர்ணிக்கின்றனர். கீர்த்தி சுரேஷ் தற்போது ரெப்ரெஷ்மெண்ட் செய்து கொள்வதற்காக மாலத்தீவுக்கு சென்றுள்ளார். இயற்கை அழகுடன் அமைந்திருக்கும் இந்த புகைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கவர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார்.
மாலத்தீவை சூடாக்கிய கீர்த்தி சுரேஷ்

keerthi-suresh-2-cinemapettai
அதிலும் அங்கு அவர் நீச்சல் குளம் ஒன்றில் நீராடியது போல் எடுத்திருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. இதில் கீர்த்தி சுரேஷ் பயங்கர ஸ்லிம்மா இருப்பது கண்கூடாக தெரிகிறது. ஒரு சாயலில் கீர்த்தி சுரேஷை பார்த்தால் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் போன்று தெரிகிறது என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.
கடற்கரையில் நின்று போஸ் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்

keerthi-suresh-3-cinemapettai.jpg
அதுமட்டுமின்றி கடற்கரையில் நின்று போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் எக்கச்சக்கமான லைக்குகளை குவிக்கின்றனர். கீர்த்தி சுரேஷ் இந்த டூரை முடித்துவிட்டு ஏற்கனவே கமிட்டாகி இருக்கும் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.
ரெப்ரெஷ்மெண்ட் செய்து கொள்வதற்காக மாலத்தீவுக்கு சென்ற கீர்த்தி சுரேஷ்

keerthi-suresh-4-cinemapettai.jpg
Also Read: சினிமாவில் இடம் ரொம்ப முக்கியம்.. கீர்த்தி சுரேஷுக்கு பாடம் புகட்டிய பிரபலம்
