ஒன்றிய அரசை மறைமுகமாக வெளுத்து வாங்கிய ரகு தாத்தா டீசர்.. கீர்த்தி சுரேஷ் ஆல் வெடிக்கும் புரட்சி

Raghuthatha Official Teaser | Keerthy Suresh: கேஜிஎஃப், காந்தாரா போன்ற பிரம்மாண்டமான படங்களை தயாரித்துள்ள ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் லீட் ரோலில் நடித்த படம் ‘ரகு தாத்தா’. இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகிறது. இந்த டீசரில் கீர்த்தி சுரேஷ் ரொம்பவே துணிச்சலாக ஒன்றிய அரசை வெளுத்து வாங்கி இருக்கிறார்.

பல வருடங்களாகவே மத்தியில் ஆளும் பாஜக கட்சி ஹிந்தி மொழியை, எப்படி எல்லாமோ திணிக்க பார்க்கின்றனர். ஆனால் தமிழகத்தில் மட்டும் அவர்களது பருப்பு வேகல. ஹிந்தி திணிப்பை எதிர்த்து கயல்விழி டீச்சராக நடிகை கீர்த்தி சுரேஷ், இந்தப் படத்தில் தன்னுடைய புரட்சிகரமான நடிப்பை வெளிக்காட்டி இருக்கிறார்.

அதையே கொஞ்சம் காமெடியாகவும் சொல்ல பார்த்துள்ளார். இந்த டீசரில், ‘ஹிந்தி எக்ஸாம் எழுதுனாதான் ப்ரோமோஷன் கிடைக்கும்னா, அப்படி ஒரு ப்ரோமோஷன் எனக்கு தேவை இல்லைன்னு’ கீர்த்தி சுரேஷ் பேசிய டயலாக் இப்போது சோசியல் மீடியாவை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறது.

Also Read: கவர்ச்சி காட்டாமல் கேரியரில் ஜெயித்த 5 நடிகைகள்.. மாடர்ன் நதியாவாக இருக்கும் சாய் பல்லவி

அதேபோல் ‘திணிக்காதே! திணிக்காதே! ஹிந்தியை திணிக்காதே!’, ‘ஹிந்தி தெரியாது.. போயா!’ என்று இவர் சொன்ன வசனங்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த டீசர் முழுக்கவே ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிரான சம்பவங்கள் தான் நிறைந்துள்ளது. சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ‘அன்னபூரணி’ படத்தில் இந்து மதத்தினை புண்படுத்தியதாக அந்தப் படத்தை ஓடிடி-யில் இருந்தே டெலிட் செய்தனர்.

அதேபோல் இந்தி மொழிக்கு எதிராக ஒன்றிய அரசை எதிர்த்து முழக்கமிட்டிருக்கும் கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா படத்திற்கும் நாலா பக்கத்தில் இருந்தும் ஏகப்பட்ட பஞ்சாயத்தை கிளப்ப போகிறது. ஆனால் தமிழகத்தில் கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா டீசருக்கு மட்டுமல்ல, படத்திற்கும் பச்சைக்கொடி காட்டுகின்றனர்.

Also Read: ஜெயம் ரவி கைவசம் இருக்கும் 5 படங்கள்.. பிளாப் படங்கள் கொடுத்தாலும் டாப்பில் இருக்கும் ஹீரோ

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்