ஜெயம் ரவி கைவசம் இருக்கும் 5 படங்கள்.. பிளாப் படங்கள் கொடுத்தாலும் டாப்பில் இருக்கும் ஹீரோ

Jayam Ravi: நடிகர் ஜெயம் ரவிக்கு இந்த வருட தொடக்கத்திலேயே பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதைத்தொடர்ந்து வெளியான அகிலன் மற்றும் இறைவன் போன்ற படங்கள் அவருக்கு படு தோல்வியை கொடுத்திருக்கிறது. என்னதான் அடுத்தடுத்து தோல்வி படங்கள் கொடுத்தாலும், தற்போது ஜெயம் ரவி கைவசம் ஐந்து படங்கள் இருக்கின்றன. அந்த படங்களை பற்றி பார்க்கலாம்.

ஜெயம் ரவி கைவசம் இருக்கும் 5 படங்கள்

சைரன்: இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் சைரன். இந்த படத்தில் ரவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார்கள். சைரன் படத்தில் நடிகர் ஜெயம் ரவி கிட்டத்தட்ட 16 வருடங்கள் சிறை தண்டனை அனுபவிப்போம் ஆம்புலன்ஸ் டிரைவராக நடிக்கிறார். அவரை சுற்றி நடக்கும் கதை களம் தான் படத்தின் கதை.

பிரதர்ஸ்: சிவா மனசுல சக்தி மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பிரதர்ஸ் படம் மூலம் ஜெயம் ரவியுடன் கைகோர்த்து இருக்கிறார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு வேலைகள் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டு, பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

Also Read:2023 ஓடிடி-இல் வெற்றி பெற்ற 7 படங்கள்.. கமுக்கமாக வந்து நச்சென்று கதையை கொடுத்த சித்தா!

ஜீனி: கோமாளி படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜெயம் ரவி ஜீனி படத்தின் மூலம் மீண்டும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உடன் இணைந்து இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் அர்ஜுனன் ஜூனியர் இயக்குகிறார். ஜீனி படத்தில் கீர்த்தி செட்டி மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் ஜெயம் ரவியுடன் இணைகிறார்கள். இந்தப் படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

காதலிக்க நேரமில்லை: இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் இணைந்து நடிக்கும் படம் காதலிக்க நேரமில்லை. இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இதில் ஜெயம் ரவியுடன் இணைந்து யோகி பாபு மற்றும் லால் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விட்டது.

தக் லைஃப்: இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு கமலஹாசன் தக் லைஃப் என்னும் படத்தின் மூலம் இணைகிறார். இந்த படம் கமலின் 234 ஆவது படம் என்பதால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் துல்கர் சல்மான் மற்றும் த்ரிஷாவுடன் இணைந்து ஜெயம் ரவியும் நடிக்கிறார். ஜெயம் ரவி ஏற்கனவே தீவிர கமலஹாசன் ரசிகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read:பிக்பாஸ் வீட்டில் சரவண விக்ரம் வாங்கிய மொத்த சம்பளம்.. மிக்சர் சாப்பிட்டுட்டு சும்மா இருந்ததுக்கே இத்தனை லட்சமா!

- Advertisement -spot_img

Trending News