ஒரே மேடையில் கயலுக்கும் தங்கைக்கும் கல்யாணம்.. அண்ணியின் ஆசையை நிறைவேற்ற போகும் ராஜி

Kayal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற கயல் சீரியலில், பல வருடங்கள் போராட்டத்திற்கு பிறகு கயல் எழில் கல்யாணம் ஒரு வழியாக கை கூடி விட்டது. ஆனால் இதில் ஒரு கலவரத்தை உண்டாக்கும் விதமாக பெரியப்பா பல வழிகளில் சதி செய்து வருகிறார். அதை எல்லாம் முறியடித்து காமாட்சி கயல் கல்யாணத்தை கண்குளிர பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

இந்த நேரத்தில் அன்புக்கு வச்ச வேஷம் காமாட்சிக்கு எமனாக போய்விட்டது. அதாவது அன்பு தன் மகள் ஷாலினியை காதலிப்பது பிடிக்காத ஷாலினி அம்மா அன்புக்கு கொடுக்கும் ஜூஸில் விஷம் வைத்து விட்டார். இது தெரியாத காமாட்சி அந்த ஜூசை குடித்துவிட்டு ரத்த வாந்தி எடுக்கிறார். இதனால் தன் உயிருக்கு ஏதோ ஒரு பிரச்சனை ஏற்பட்டு விட்டது என்று காமாட்சி புரிந்து கொண்டார்.

காமாட்சியின் ஆசை நிறைவேறுமா?

அதனால் தன்னுடைய மகள் கல்யாணத்தை பார்த்தாக வேண்டும் என்று எழிலிடம் இன்று நடக்கப் போகும் நிச்சயதார்த்தத்தை கல்யாண மேடையாக மாற்ற வேண்டும் என்று கெஞ்சுகிறார். ஆனால் எழில், கயல் சம்பந்தம் இல்லாமல் நான் எதையும் பண்ண மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து விட்டார். அத்துடன் கயல் அம்மா கூறியதை கயலுக்கு போன் பண்ணி சொல்லிவிட்டார்.

இதனால் கயல், அம்மாவிடம் உனக்கு என்ன ஆச்சு என்ன பிரச்சனை என்று கேட்கிறார். எதையும் சொல்லாமல் காமாட்சி கயிலை சமாளித்து விட்டார். இதனை தொடர்ந்து நிச்சயதார்த்தம் நடக்கும் நேரத்தில் வடிவு, காமாட்சியை இழிவாக பேசி விட்டார். இதைக் கேட்ட கயல் ஆக்ரோஷமாக பொங்கி பெரியப்பா மற்றும் வடிவை வெளியே போக சொல்லி விட்டார்.

ஆனால் மற்றவர்கள் அனைவரும் நீங்கள் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்று பெரியப்பாவை கெஞ்சுகிறார்கள். உடனே பெரியப்பா இதுதான் சான்ஸ் என்று கயிலை எப்படியாவது தன் காலில் விழ வைக்க வேண்டும் என்று பிளான் போட்டுவிட்டார். ஆனால் அதைக் கெடுக்கும் விதமாக ராஜி, கயலின் பெரியப்பாவை சமாதானப்படுத்தி விட்டார்.

பிறகு ஒரு வழியாக நிச்சயதார்த்தம் நடைபெற்று விடும் என்று எதிர்பார்த்த நிலையில் கயல் அம்மாவுக்கு சீரியஸாக ஏதோ உடம்பை பிரச்சினை வந்துவிட்டது. இதனால் காமாட்சி கயல் மற்றும் தங்கையின் திருமணத்தை பார்க்க முடியாமல் போய்விடுமோ என்று பயம் வந்துவிட்டது.

இந்த பயத்தை போக்கும் விதமாக ராஜி முன்னாடி வந்து கயல் எழிலின் திருமணத்தையும் மற்றும் கயலின் தங்கைக்கு தன்னுடைய மகனை கட்டி வைத்து காமாட்சியை சந்தோஷப்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

கயல் சீரியலின் முந்தைய சம்பவங்கள்

Next Story

- Advertisement -