கயல் நிச்சயதார்த்தத்தை கல்யாண மேடையாக மாற்றப் போகும் காமாட்சி.. எழில் நடத்தப் போகும் அரங்கேற்றம்

Kayal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற கயல் சீரியலில், பல வருடங்களாக காத்துக் கொண்டிருந்த கயலின் நிச்சயதார்த்தம் நடக்காமல் இழுத்தடித்து கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் இந்த நிச்சயதார்த்தத்தை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று கயலின் பெரியப்பா பல சூழ்ச்சிகளை பண்ணி வருகிறார். அதே மாதிரி ராஜியையும் கயலையும் மோதவிட்டு அதில் குளிர் காய பெரியப்பா ஆசைப்படுகிறார்.

இதை தெரிந்து கொள்ளாத கயல் மற்றும் அவருடைய அத்தை மோதிக் கொள்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி எப்படியாவது மகளின் நிச்சயதார்த்தத்தை நல்லபடியாக நடத்த வேண்டும் என்று காமாட்சி மும்மரமாக செயல்பட்டு ராஜி காலில் விழுந்து கெஞ்சி நிச்சயதார்த்தத்தை நடத்த நினைக்கிறார்.

கயல் கழுத்தில் தாலி கட்ட போகும் எழில்

ஆனால் வேதவல்லி தன் மகள் ஷாலினி, அன்புவை கல்யாணம் பண்ணக்கூடாது என்று ஜூஸில் விஷம் வைத்திருக்கிறார். இது தெரியாமல் அந்த ஜூஸை கயல் அம்மா காமாட்சி மயக்கம் போட்டு விழும் சூழலில் குடித்து விடுகிறார். இதனால் கயல் அம்மாவின் வாயிலிருந்து ரத்தம் வருகிறது. இதனை மறைத்துக் கொண்ட கயல் அம்மா காமாட்சி நமக்கு ஏதோ ஒரு ஆபத்து நடக்கப்போகிறது என்பதை உணர்ந்து விட்டார்.

இதனால் நம் மகள் கல்யாணத்தை பார்க்க முடியாமல் போய்விடுமோ என்ற பயமும் அவருக்கு வந்துவிட்டது. அதனால் காமாட்சி நேரா எழிலிடம் சென்று அவருடைய சூழ்நிலையை சொல்லி கயிலை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார். ஆனால் எப்படி இந்த நிச்சயதார்த்தத்தை திருமணம் ஆக மாற்ற முடியும் என்று எழில் யோசித்து வருகிறார்.

பிறகு கயல் அம்மா கெஞ்சியே நிலையில் எழில் ஒத்துக் கொள்கிறார். இதனால் கயல் மற்றும் எழிலின் நிச்சயதார்த்தம் கல்யாணம் மேடையாக மாறப் போகிறது. இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பெரியப்பா தோற்றுப் போய் நிற்கப் போகிறார். அதே நேரத்தில் கயல், தன்னுடைய அம்மாவின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் வந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் கடைசியாக மருத்துவமனைக்கு கொண்டு போய் காப்பாற்றி விடுவார்.

கயல் சீரியலில் நடந்து முடிந்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -