புதன்கிழமை, நவம்பர் 6, 2024

குணசேகரனை விட மட்டமாக இறங்கிய கதிர்.. சக்தியை மன்னித்த ஜனனி

சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் தான் எல்லாத்துக்கும் வில்லாதி வில்லன் என்று இருந்த நிலையில் தற்போது வரும் எபிசோடுகளில் இவரை விட டபுள் மடங்காக அட்டூழியம் செய்து வருவது கதிர். அதுவும் இவருடைய கேரக்டர் எப்படி இருக்கிறது என்றால் பொதுவாக எந்த பெண்ணுக்கும் மரியாதை கொடுக்க தெரியாதவராகவும் அவர்களை கேலியும் கிண்டலும் செய்யும் ஒரு வக்ரபுத்தி உள்ளவராகவும் இருக்கிறார்.

அதிலும் ஜனனிடம் தரை குறைவாக பேசுவதும், அநாகரிகமாக வார்த்தையை யூஸ் பண்ணி மட்டம் தட்டுவதுமே இவருடைய வேலையாக பார்த்து வருகிறார். இவருக்கும் ஒரு பாயசத்தை ரெடி பண்ணினா மட்டும் தான் இவர் கொஞ்சம் அடங்குவார். அதாவது குணசேகரன் இவரை ஏதாவது ஒரு விதத்தில் அவமானப்படுத்தி வந்தால் மட்டும் தான் திருந்துவார். எப்படி தற்போது ஞானத்துக்கு அறிவு வந்ததோ அதே மாதிரி கதிருக்கும் அறிவு வரணும்னா குணசேகரன் கையில்தான் இருக்குது.

Also read: பாக்யாவை தவறாக புரிந்த கோபி.. என்னைய பழிவாங்க இப்படி ஒரு முடிவா?

அதுவரை குணசேகரனின் அல்லக்கை கொஞ்சம் ஓவர் துடுப்பாக தான் இருக்கும். அடுத்ததாக சக்திக்கு இன்னும் இவருடைய கதாபாத்திரம் ரொம்பவே ஸ்ட்ராங்காக கொண்டு போகலாம். அதை விட்டுட்டு எப்போது சும்மா ஷோகேஸ்ல இருக்கிற பொம்ம மாதிரி வந்து எல்லாத்துலயும் நின்னுட்டு இருக்காரு. எதற்கு இந்த தேவையில்லாத ஆணி என்று தோன்றுகிறது.

அடுத்ததாக ஜனனிக்கு எந்தவித உரிமையும் இந்த வீட்டில் இருப்பதற்கு இல்லாத போது அவள் ஏன் இங்கே இருக்க வேண்டும் என்று கதிர் கேட்ட போது கூட சக்தி அமைதியாக தான் இருந்தார். என்ன தான் சக்தி விவாகரத்து பேப்பரில் கையெழுத்து போட்டாலும் தற்போது ஜனனி தான் வேணும் என்று நினைக்கும் போது இந்த இடத்தில் வாய் திறந்து கொஞ்சமாவது அதை சொல்லி இருக்கலாம். அப்பதான் கதிருக்கு மண்டையில் உறைக்கும்.

Also read: ஐஸ்வர்யா ஓவர் ஆட்டத்தால் வந்த விளைவு.. இறுதி கட்டத்தை நோக்கி பரபரப்பாக நகரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

பிறகு ஜனனி, ஜீவானந்தத்தை எப்படி கண்டுபிடிப்பது என்ன செய்வது என்று குழப்பத்தில் இருக்கிறார். ஆனால் இவருடைய நோக்கமே ஜீவானந்தம் எங்கே இருக்கார் என்று கண்டுபிடிப்பது தான். ஆனால் அதைத் தவிர ஆதிரை அருண் திருமணத்தில் தான் அதிகம் ஈடுபாடு காட்டுகிறார். பிறகு எப்படி அப்பத்தா சொன்ன ஜீவானந்தத்தை கண்டுபிடிக்க முடியும். இவர் வந்தால் மட்டும் தான் குணசேகரன் கனவுக்கோட்டையாக கட்டி மிதந்து கொண்டிருக்கும் அந்த 40% சொத்தை பிடுங்க முடியும்.

அப்பத்தா மறுபடியும் கண்விழித்து ஜனனிடம் ஜீவானந்தம் பற்றி சொல்லணும். இல்லையென்றால் ஜனனியாக கண்டுபிடித்தால் மட்டும் தான் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும். மேலும் இப்பொழுது ஜனனி சக்தியை நீ வெளியே தூங்க வேண்டாம் என்னுடன் சேர்ந்து இங்கே இரு நம்ம ஒரு நல்ல நண்பர்களாக இருக்கலாம் என்று சொல்கிறார். இதை பார்க்கும் போது சக்தி மேல் இருந்த கோபம் குறைந்து ஜனனி அவரை ஏற்றுக் கொண்டார் என்பது தெரிகிறது. கடந்த இரண்டு நாட்களாக குணசேகரன் எங்க போய்ட்டாருன்னு தெரியல ஆளையே காணோம். ஒருவேளை ஆதிரை கல்யாண பத்திரிகையை தூரத்து சொந்தங்களுக்கு கொடுக்க போயிருப்பாரு.

Also read: குணசேகரனின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட மக்கு ஆதிரை.. விசாலாட்சி எடுக்க போகும் முடிவு என்ன

- Advertisement -spot_img

Trending News