Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நடிகையை பந்தாடிய 20 நடிகர்கள்.. காற்றில் பறந்த மானம், விஷாலை சுற்றி அடிக்கும் கர்மா

விஷாலின் மானம் போனது மட்டுமல்லாமல் அவர் செய்த கர்மாவே சொந்த வாழ்க்கையில் அவரை திருப்பி அடித்திருக்கிறது.

vishal

சினிமா வாய்ப்பு தேடி வந்த நடிகை ஒருவர் 20-க்கும் மேற்பட்ட நடிகர்களால் ஏமாற்றப்பட்டு இருக்கிறார். அண்மைக்காலமாகவே அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் வாய்ப்பு என்ற நிலை சினிமாவில் இருக்கிறது. இதற்கு சிலர் மறுப்பு தெரிவித்தாலும் பல புது முகங்கள் இது போன்ற அட்ஜஸ்ட்மென்ட் வாய்ப்புகளை ஏற்றுக் கொள்கின்றனர்.

அப்படித்தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் நடிகை ஸ்ரீ ரெட்டியும் பல பிரபலங்களின் ஆசைக்கு இணங்கி இருக்கிறார். ஆனால் அவரை படுக்கையில் பயன்படுத்திக் கொண்டு வாய்ப்பு தராமல் அவர்கள் ஏமாற்றி இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் கோதித்துப் போன அவர் தன்னை ஏமாற்றிய அனைவரின் பெயர்களையும் மீடியாவில் போட்டு உடைத்தார்.

Also read: விஷாலுடன் நடித்த பாவத்தால் கிசுகிசுக்கப்பட்ட 5 நடிகைகள்.. சுத்தமா மார்க்கெட்டை காலி செய்த லட்சுமி மேனன்

அந்தப் பட்டியலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரபல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் என பலர் சிக்கினார்கள். அத்தனை பேரின் முகத்திரையையும் கிழித்த ஸ்ரீ ரெட்டி எந்த மாதிரியான கஷ்டங்களை எல்லாம் அவர் அனுபவித்தார் என்று கூட வெளிப்படையாக கூறினார்.

அந்த வகையில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸில் தொடங்கி ஸ்ரீகாந்த், விஷால், ராகவா லாரன்ஸ் என பல தமிழ் பிரபலங்களை பற்றி புட்டு புட்டு வைத்தார். அது மட்டுமல்லாமல் பிரபல தெலுங்கு ஹீரோ நானி உட்பட பல நடிகர்களின் பெயர்களையும் கூறினார். மேலும் இவர்கள் அனைவரும் தன்னை நன்றாக பயன்படுத்திக் கொண்டு வாய்ப்பு தராமல் ஏமாற்றி விட்டார்கள் எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.

Also read: திருமணத்திற்கு முன்பே ஆடிய ஆட்டம்.. கேரளாவே கதி என்று கிடக்கும் விஷால்

அதைத்தொடர்ந்து வினோதமான ஒரு போராட்டத்தையும் அவர் நடத்தினார். இது மிகப்பெரும் பிரளயத்தையே உண்டு படுத்தியது. அதிலும் இந்த விவகாரம் விஷாலுக்கு தான் பெரும் சோதனையாக அமைந்திருக்கிறது. அதாவது அவருடைய திருமண வாழ்க்கை கேள்விக்குறியானதற்கே இந்த சம்பவம் தான் காரணமாக இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு விஷாலுக்கு அனுஷா ரெட்டி என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.

ஆனால் சில காரணங்களால் அது திருமணம் வரை செல்லாமல் பாதியிலேயே நின்று போனது. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் ஸ்ரீ ரெட்டியின் விவகாரம் பூதாகரமாக வெடித்தது தான் இந்த திருமண முறிவிற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. இதனால் விஷாலின் மானம் போனது மட்டுமல்லாமல் அவர் செய்த கர்மாவே சொந்த வாழ்க்கையில் அவரை திருப்பி அடித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

Also read: மூக்கு முட்ட குடிச்சிட்டு காரில் மோதிய விஷால் பட நடிகை.. போதை தெளிந்த பின் பட்ட அசிங்கம்

Continue Reading
To Top