தேரை இழுத்து தெருவில் விட்டு ஐஸ்வர்யா.. கண்மூடித்தனமாக நம்பி தண்டனை அனுபவிக்கும் கண்ணன்

Pandian Stores Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் ஐஸ்வர்யாவை பார்ப்பதற்கு கொஞ்சம் பாவமாக இருந்தாலும், இந்த தண்டனை இவர்களுக்கு தேவை தான் என்று சொல்லும் அளவிற்கு ரொம்பவே ஓவராக ஆட்டம் போட்டார்கள். ஆனால் கடைசியில் ஐஸ்வர்யாவின் பிரசவ நேரத்தில் கண்ணனால் கூட இருக்க முடியாமல் போய்விட்டது.

ஐஸ்வர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்து சுய நினைவுக்கு திரும்பிய நிலையில் அனைவரிடமும் கண்ணனை பற்றி விசாரிக்கிறார். அடுத்ததாக நீங்கள் பார்க்கப் போனால் நானும் குழந்தையும் நன்றாக இருக்கிறோம், எங்களை நினைத்து கவலைப்பட வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று கூறுகிறார்.

Also read: ஜான்சி ராணியை வைத்து டிஆர்பி ரேட்டிங்கை கூட்டும் ஜீ தமிழ்.. டபுள் மடங்கு சம்பளத்தை கொடுத்து இழுத்த சீரியல்

அடுத்ததாக இவரை பார்க்க வந்த அத்தாச்சி, கண்ணன் இந்த நிலைமையில் தற்போது இருப்பதற்கு காரணமே நீ தான். எப்படி ஒழுங்காக குடும்பம் நடத்த வேண்டும் என்று தெரியாமல் அளவுக்கு அதிகமாக ஆடம்பர செலவு செய்ததால் தான் தற்போது கண்ணன் தண்டனையை அனுபவித்து வருகிறான் என்று ஐஸ்வர்யாவை நல்ல நாலு கேள்வி கேட்டு விடுகிறார்.

இதற்கு அடுத்து மூர்த்தியிடம், கதிர் ஜெயிலுக்கு போய் கண்ணனை பார்த்து விட்டு வருகிறேன் என்று சொல்கிறார். அதற்கு அவர் நீங்க ஏன் இப்ப அங்க போக வேண்டும் என்று கேட்க, உடனே ஜீவா குழந்தை பிறந்திருக்கும் விஷயத்தை சொல்லிட்டு வருகிறோம் என்று சொல்கிறார்.

Also read: ஒத்த வார்த்தையில் கரிகாலனை அடக்கிய ஆதிரை..  ஜனனியை ஏமாற்றும் கௌதம்

அடுத்து கதிர் மற்றும் ஜீவா ஜெயிலுக்கு போய் கண்ணனை பார்க்கிறார்கள். பார்க்கப் பாவமாகத்தான் இருக்கிறது ஆனாலும் கண்மூடித்தனமாக நம்பியதால் இந்த தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும். பிறகு ஐஸ்வர்யாவுக்கு குழந்தை பிறந்த விஷயத்தை சொல்கிறார். இதைக் கேட்ட கண்ணனுக்கு மனதளவில் கொஞ்சம் வருத்தமும் இருக்கிறது.

ஏனென்றால் குழந்தை பிறக்கும் சமயத்தில் ஐஸ்வர்யாவின் பக்கத்தில் நான் இல்லாமல் போய்விட்டேன் என்று கதறுகிறார். அத்துடன் நான் இங்கு எந்த கஷ்டமும் படவில்லை என்று ஐஸ்வர்யாவிடம் சொல்லி அவளையும்,என்னுடைய குழந்தையும் கொஞ்சம் நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று கண்ணன் கூறுகிறார். ஆக மொத்தத்தில் ஒரு குடும்பத்தில் உள்ள பெண் எந்த மாதிரி இருக்க கூடாது, என்பதற்கு உதாரணமாக ஐஸ்வர்யாவின் கேரக்டரை வைத்து காட்டி விட்டார்கள்.

Also read: செல்லா காசாக நிற்கும் குணசேகரன்.. கௌதமிடம் மொத்த பொறுப்பையும் ஒப்படைத்த ஜீவானந்தம்

Next Story

- Advertisement -