கொடூர கொலைகார சைக்கோ தர்ஷன்.. துடிதுடித்து இறந்த ரசிகர், வெளியான போட்டோவால் கிளம்பிய எதிர்ப்பு

Dharshan: பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தான் இப்போது சோஷியல் மீடியாவின் பரபரப்பு செய்தியாக இருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருடைய ரசிகர் தற்கொலை செய்து கொண்டதாக உடல் கண்டெடுக்கப்பட்டது.

ஆனால் போலீஸ் விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் அதற்கு தர்ஷன் தான் காரணம் என்றும் கண்டறியப்பட்டது. அதை தொடர்ந்து தர்ஷன் கைது செய்யப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதன் பின்னணி என்று பார்க்கையில் கொலை செய்யப்பட்ட ரேணுகா சாமி தர்ஷனின் காதலியான நடிகை பவித்ரா கௌடாவுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெசேஜ் செய்திருக்கிறார்.

இத்தனைக்கும் தர்ஷன் திருமணம் ஆகி மனைவி குழந்தைகளுடன் இருக்கிறார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பவித்ரா கௌடா செய்வது தவறு என ரேணுகா சாமி குற்றம் சொல்லி இருக்கிறார். அதையே மெசேஜ் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி இருக்கிறார்.

இதுதான் இந்த கொலைக்கான பின்னணி காரணம். அதைத்தொடர்ந்து இந்த வழக்கு தீவிரம் அடைந்துள்ள நிலையில் ரேணுகா சாமியின் இறுதி நிமிடங்கள் மிகவும் கொடூரமாக இருந்ததற்கான போட்டோ ஆதாரங்கள் வெளியாகி உள்ளது.

சித்திரவதை செய்யப்பட்டு இறந்த ரசிகர்

அதாவது அவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்ட போது எந்த மாதிரியான நிலையில் இருந்தது என்பதை தெரிவிக்கும் வகையில் போட்டோக்கள் வெளியாகி இருக்கிறது. அதில் அவருக்கு தாடை உடைந்து உடலின் அனைத்து பாகங்களிலும் கடுமையான காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது.

அதேபோல் ரத்தம் உறைந்து, மின்சாரம் தாக்கியதற்கான அறிகுறிகளும் உள்ளது. கிட்டத்தட்ட உயிர் போகும் வரை கொடூரமான தாக்குதல் நடந்திருக்கிறது. இத்தனையும் தர்ஷன் கண் முன்பே நடந்துள்ளது.

மிகவும் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு இறந்த ரசிகரின் உடலை பார்க்கும் போதே ஈர கொலை நடுங்குகிறது. இதை பார்த்த அனைத்து திரையுலக ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் அனைவரும் தர்ஷனுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இப்படி ஒரு கொலைகார சைக்கோ விசாரணை இல்லாமல் தண்டிக்கப்பட வேண்டும். கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு அந்த ரசிகரை இவர் சித்திரவதை செய்து கொலை செய்திருக்கிறார்.

உண்மையில் இதை பார்க்கும் போது கோலிவுட் நடிகர்கள் ஜென்டில்மேன் ஆக இருக்கின்றனர் என்பது போன்ற கமெண்ட்டுகள் பரவி வருகிறது. ஆம் தமிழ் திரையுலக நடிகர்களை பொருத்தவரையில் ரசிகர்களிடம் கனிவாகத்தான் நடந்து கொள்வார்கள். இதை பல வீடியோக்களில் நாம் பார்த்திருக்கிறோம்.

மேலும் விசாரணையில் தர்ஷன் 30 லட்சம் ரூபாய் கொடுத்து இந்த கொலையை மறைக்க முயற்சி செய்ததும் தெரிய வந்துள்ளது. அதை அவரும் ஒப்புக்கொண்டு உள்ளார்.. இதனால் விரைவில் இவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கன்னட நடிகர் தர்ஷனின் கொடூர மறுபக்கம்

Next Story

- Advertisement -