திருமணத்தை மீறிய உறவால் ரசிகனை கொன்ற கன்னட சூப்பர் ஸ்டார்.. தர்ஷன் கைதானதற்கு காரணம் இதுதான்

Kannada Superstar Dharshan: தனக்காக கட்டவுட் வைத்து, போஸ்டர் ஒட்டி, பாலாபிஷேகம் செய்த ரசிகனை ஹீரோ துடிக்கத் துடிக்க கொலை செய்து விட்டார் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா. அப்படி ஒரு விஷயத்தை தான் கன்னட சூப்பர் ஸ்டார் தர்ஷன் செய்ததாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

1996 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் அடிக்க, கர்நாடகாவின் சினிமா உலகில் தவிர்க்க முடியாத கதாநாயகனாக உருவெடுத்தவர் தர்ஷன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

அதுவும் தன்னுடைய ரசிகரை துடிதுடிக்க கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பது தான் ஆச்சரியம். இதற்கு எல்லாம் காரணம் அவருக்கு இருந்த திருமணத்தை மீறிய உறவு தான். ரேணுகா சாமி என்பவர் நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகர்.

இவரை கடந்த சில தினங்களுக்கு முன் காணவில்லை என அவருடைய வீட்டார் போலீசில் புகார் அளித்திருந்தார்கள். வீட்டிற்கு அருகிலேயே ஒரு இடத்தில் சாக்கடையில் ஏகப்பட்ட காயங்களுடன் ரேணுகா சாமி இறந்து கிடந்தார்.

தர்ஷன் கைதானதற்கு காரணம் இதுதான்

இந்த வலது பதிவு செய்த சில மணி நேரங்களில் மூன்று பேர் தாமாக முன்வந்து ரேணுகா சாமியுடன் இருந்த கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் அவரை கொன்று விட்டதாக சரணடைந்தார்கள். இதனால் தான் கர்நாடக போலீசுக்கு இந்த கேஸ் மீது அதிக சந்தேகம் வந்தது.

சரணடைந்தவர்களை சரியாக கவனித்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கொலைக்கு பின்னால் தர்ஷன் இருப்பது வெளிவந்தது. தர்ஷனுக்கு சில வருடங்களுக்கு முன்பு விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி குழந்தை இருக்கிறது.

இந்நிலையில் அவர் பவித்ரா கௌடா என்பவருடன் நெருங்கி பழகி வந்திருக்கிறார். இது விஜயலட்சுமிக்கு பிடிக்கவில்லை. இதனால் சமூக வலைத்தளத்திலேயே தன்னுடைய வெறுப்பை தெரிவித்து வந்திருக்கிறார். தனக்கு பிடித்த நடிகரின் மனைவி கஷ்டப்படுவதை தாங்க முடியாமல் ரேணுகா சாமி, பவித்ராவுக்கு இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து அவரை திட்டி குறுஞ்செய்தி அனுப்பி வந்து கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் வெறுப்பான பவித்ரா இதை தர்ஷன் இடம் சொல்லி இருக்கிறார். தர்ஷன் ரேணுகா சாமியை ஆளை வைத்து தூக்கி கொண்டு வந்து அவர்களுடன் சேர்ந்து ரேணுகா சாமியை அடித்தே கொன்று இருக்கிறார்.

அது மட்டுமில்லாமல் சைவ உணவை மட்டுமே சாப்பிடும் ரேணுகா சாமிக்கு அசைவ உணவு வற்புறுத்தி கொடுக்கப்பட்டதாகவும் சில செய்திகள் சொல்கின்றன. திருமணத்தை மீறிய ஒரு உறவுக்காக தன் மீது உயிரையே வைத்திருந்த ரசிகரை கொன்றதாக கன்னட சூப்பர் ஸ்டார் தர்ஷன் கைது செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த சினிமாவுலகையும் முழுக்க இருக்கிறது.

Next Story

- Advertisement -