கை, கால்கள் செயல் இழந்த நிலையில் பிரபல காமெடி நடிகர்.. உதவிக்கரம் நீட்டுவாரா வடிவேலு?

Vadivelu: நகைச்சுவை நடிகர் உருக்கமாக பேசியிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நம் பார்த்து ரசித்த நடிகர்கள் உடல்நலம் சரியில்லாமல், வயசாகி இருப்பதை பார்க்கும் போதெல்லாம் ஒருவித மன இறுக்கம் தான் நமக்கு ஏற்படுகிறது.

கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் போன்றவர்களின் காமெடி காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைப்பதற்கு பெரும்பாலான காரணமாக இருப்பவர்கள் அவர்களுடைய கூட்டத்தில் இருக்கும் சத நடிகர்கள் தான். ஒவ்வொருவருக்கும் என்று தனியான ஒரு குரூப் உண்டு.

அவர்களுக்குத்தான் இந்த காமெடி நடிகர்கள் தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பார்கள். அப்படி வடிவேலுவுடன் 30 படங்களுக்கு மேல் பயணித்தவர் தான் வெங்கல் ராவ். 25 ஆண்டுகளாக ஸ்ட்ரென்த் மாஸ்டராக பணிபுரிந்த இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நடிகராக மாறி வடிவேலு குரூப்பில் இணைந்தார்.

உதவிக்கரம் நீட்டுவாரா வடிவேலு ?

கொரில்லா செல், தலையிலிருந்து கைய எடுத்தால் கடிப்பேன் போன்ற காமெடிகளால் இவர் மக்களிடையே பரீட்சையமானார். கடந்த 2022 ஆம் ஆண்டு இவருக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு விஜயவாடாவில் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

அதை தொடர்ந்து வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்தார். தற்போது இவருக்கு கைகள் மற்றும் கால்கள் செயலிழந்து விட்டதாக ஒரு வீடியோவில் தெரிவித்து இருக்கிறார். மேலும் நடிகர் சங்கம், பொதுமக்கள் தன்னுடைய மருத்துவ செலவுக்கு உதவும் மாறும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

தன்னுடனே இருந்த போண்டாமணியை தான் வடிவேலு கண்டு கொள்ளவில்லை, இவருக்காவது உதவி செய்வாரா என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Next Story

- Advertisement -