Connect with us
Cinemapettai

Cinemapettai

rajini-kamal

Tamil Cinema News | சினிமா செய்திகள்

100 கோடியை தாண்டிய கமலின் சம்பளம்.. அதல பாதாளத்திற்கு செல்லும் ரஜினியின் மார்க்கெட்

தமிழ் சினிமாவில் தற்போது இரண்டு ஆளுமைகள் என்றால் அது ரஜினி, கமல் தான். கமல் ஹீரோவாக நடிக்கும் போதே ரஜினி சினிமாவில் நுழைந்தாலும் வில்லன் கதாபாத்திரங்களில் தான் நடித்து வந்தார். அப்போது கமலுக்கு தான் அதிக மவுசு இருந்தது.

அதன் பின்பு ரஜினியும் ஹீரோ அந்தஸ்தை பெற்ற பல சூப்பர் படங்களை கொடுக்க ஆரம்பித்தார். அந்த காலகட்டத்தில் கமல், ரஜினி படங்கள் தான் போட்டி போட்டுக் கொண்டு திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து கமலின் மார்க்கெட் சரியா ரஜினி உச்சத்தை அடைந்தார்.

Also Read :ரஜினிக்கு ஏற்பட்ட அவமானம்.. காசுக்காக மட்டும்தான் நடிப்பேன் என மறுத்த இளம் நடிகை

அதிக வசூல் செய்த படங்களில் டாப் 10 படங்களை எடுத்தால் அதில் ரஜினியின் படங்கள் தான் அதிகம் இடம் பெற்றது. அதுமட்டுமின்றி கமலின் படங்களில் ஒரு படம் கூட அதில் வரவில்லை. அதுமட்டுமின்றி விஸ்வரூபம் இரண்டாம் பாகத்திற்கு பிறகு கமலுக்கு மூன்று வருடங்களாக படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஆனால் தொடர் வெற்றி படங்களை கொடுத்து வந்த ரஜினியின் மார்க்கெட் தற்போது சரிவை சந்தித்துள்ளது. பேட்ட படத்தில் 110 கோடி சம்பளம் வாங்கிய ரஜினி அண்ணாத்த படத்தில் 100 கோடி தான் வாங்கினார். மேலும் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் தற்போது ரஜினி நடித்துவரும் ஜெயிலர் படத்தில் 80 கோடி தான் சம்பளம் பேசப்பட்டுள்ளது.

Also Read :ரஜினி, விஜயகாந்த் கொடுத்த மோசமான ஃபெயிலியர்.. நம்ப வச்சு கழுத்தறுத்த பாரதிராஜா

இவ்வாறு தொடர்ந்து அடுத்தடுத்த பட தோல்வி காரணமாக ரஜினியின் மார்க்கெட் ஆட்டம் கண்டுள்ளது. ஜெயிலர் படத்தை பெரிதும் நம்பி இருக்கும் ரஜினி அந்தப் படத்திலும் ஏதாவது சொதப்பிவிட்டால் அவரது மார்க்கெட் அதல பாதாளத்திற்கு சென்று விடும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஆனால் விக்ரம் படத்திற்குப் பிறகு கமலின் மார்க்கெட் பல மடங்கு எகிறி உள்ளது. விஸ்வரூபம் 2 படத்திற்கு வெறும் 35 கோடி சம்பளம் வாங்கிய கமல் இந்தியன் 2 படத்திற்காக 150 கோடி சம்பளமாக வாங்க உள்ளார். நான்கு மடங்குக்கு அதிகமாக கமலின் சம்பளம் உயர்ந்துள்ளது.

Also Read :16 வருடங்களுக்குப் பின் இணையும் கமல், கௌதம் மேனன் கூட்டணி.. வேட்டையாடு விளையாடு 2 கதை இதுதான்

Continue Reading
To Top