கமலின் விக்ரம் படத்திற்கு தொல்லை தரும் சன் பிக்சர்ஸ்.. அப்செட்டில் படக்குழு

நீண்ட நெடிய வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் கமலஹாசனின் படத்திற்கு பழையபடி மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கமல், லோகேஷ் கனகராஜ் இணையும் விக்ரம் படத்திற்கு கமல் ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவே வெயிட்டிங்.

காரணம் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய குருநாதரான கமலஹாசனை வைத்து படம் இயக்குவது தான். அதோடு மட்டுமில்லாமல் படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் என நடிப்பில் மிரட்டும் நடிகர்களும் விக்ரம் படத்தில் களமிறங்கியுள்ளனர்.

இவர்கள் மூவருக்கும் லோகேஷ் எப்படி முக்கியத்துவம் கொடுத்து கதாபாத்திரத்தை எழுதி இருக்கிறார் என்பதை பார்க்கவே கோடான கோடி ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் விக்ரம் படம் திட்டமிட்டபடி தொடங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

முதலில் அரசியல் சர்ச்சைகளால் தள்ளிப்போன இந்த படம் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தால் மேலும் தள்ளிச் செல்லும் நிலை. தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

பல மாதங்களுக்கு முன்பே இந்த பகுதியில் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்புகள் முடிய வேண்டியது. ஆனால் திடீரென சூர்யாவுக்கு கொரானா தொற்று ஏற்பட்டு படப்பிடிப்பு தள்ளி சென்றதால் தற்போது ஒரு முழு மூச்சில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஒரே நேரத்தில் கமல், சூர்யா போன்ற இரண்டு பெரிய நடிகர்களின் படங்களுக்கு அனுமதி அளிக்க முடியாது என மாநகராட்சி நிறுவனமும் கையை நீட்டி விட்டதாம். இதனால் சூர்யா படம் முடித்துச் செல்லும் வரை கமல் காத்துக்கொண்டிருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

vikram-cinemapettai
vikram-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்