ஏவிஎம்-ஐ மீட்டெடுக்கும் முயற்சியில் கமல், ரஜினி.. 80 வருட சாம்ராஜ்யத்தின் கடைசி படம்

AVM Productions: 40களில் இருந்து தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்த தயாரிப்பு நிறுவனம் தான் ஏவிஎம் புரொடக்ஷன்ஸ். சிவாஜி கணேசன், கமலஹாசன் போன்ற ஜாம்பவான்களை இந்த நிறுவனம்தான் அறிமுகப்படுத்தியது. ஆனால் ஏவிஎம் ஸ்டுடியோஸ் கடந்த 10 வருடங்களாக எந்த படங்களையும் தயாரிக்காமல் சினிமாவை விட்டு விலகியது.

இவர்களை மீட்டெடுக்கும் முயற்சிகள் தான் உலகநாயகன் கமலஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவரும் முயற்சி செய்கின்றனர். அதுவும் 80 வருடமாக தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக கொடிகட்டி பறந்த ஏடிஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கமல், ரஜினி இருவரும் நடிக்க முன் வந்துள்ளனர். ஏவிஎம் இப்போ எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை.

இந்த நிறுவனம் இப்போது படங்கள் எடுப்பதில்லை, ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறைய இடங்களை பிளாட் போட்டு விற்பனை செய்து வருகிறார்கள். சொல்லப்போனால் சினிமாவை விட்டு ஏவிஎம் நிறுவனம் முற்றிலுமாக விலகிவிட்டது. இதற்கு காரணம் அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் தான். முக்கியமாக இப்போது உள்ள டாப் நடிகர்களை வைத்து படம் பண்ண போதிய படம் இல்லை.

Also read: எதிரிக்கு எதிரி நண்பராக கூட்டு சேர்ந்த ரஜினி.. தனுசை பழிவாங்க தலைவர் போட்ட பிளான்

முன்னணி நடிகர்கள் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும்போது அவர்களை வைத்து எப்படி படம் பண்ண முடியும் என்று ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் பிறர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி விட்டனர். இவர்கள் இப்படி இருப்பது அவர்களுக்கு வருத்தம் தான். ஆனால் யாரும் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகன் இருவரும் சேர்ந்து ஏவிஎம் ஸ்டுடியோஸ்-க்கு படம் பண்ண பிளான் பண்ணி இருக்கிறார்கள்.

இது ஏவிஎம்-க்கு கடைசி படமாக இருக்கும். ஆனால் இது எப்போது என்று தெரியவில்லை. ஏனென்றால் ரஜினி ஜெயிலர் படத்தை தொடர்ந்து டிஜே ஞானவேல் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் தலைவர் 170 படத்தில் நடிக்கிறார். அதன் தொடர்ச்சியாக தலைவர் 171-ல் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கப் போகிறார்.

இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகுதான் ஏடிஎம் தயாரிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு இருக்கிறது. அதே போல் தான் கமலும் இப்போது மணிரத்தினத்தின் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ படத்தில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக எச் வினோத் படத்திலும் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இந்த படங்களை முடித்த பிறகு தான் ஏவிஎம் நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு இருக்கிறது.

Also read: அசைவ கறிக்கு அடிமையான 4 அக்ரஹார நடிகர்கள்.. எம்ஜிஆரை விட ஒரு படி மேலே போய் பொளந்து கட்டிய கமல்

இதற்கிடையில் கமல் தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட வேண்டும். ஆனால் கமல், ரஜினி இருவருக்கும் ஏவிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கு நன்றி கடனாய் ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். இந்த விஷயத்தால் சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகன் ரசிகர்கள் மேலும் பெருமை அடைகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்