லெவல் மாறியதால் உச்சாணி கொம்புக்குப் போகும் கமல்.. ராஜ்கமல் பிலிம்ஸ் உலக நாயகனுக்கு கொடுத்த அந்தஸ்து

Actor Kamal: தன்னுடைய 68 வயதிலும் இளம் நடிகர்களுக்கெல்லாம் பயங்கர டஃப் கொடுத்துக் கொண்டிருக்கும் ஹீரோ தான் உலகநாயகன் கமலஹாசன். இவருடைய லெவலே இப்போது மாறி உச்சாணி கொம்புக்கு போய் விட்டார்.

அதுவும் உலக நாயகனின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தான் கமலுக்கு இதுவரை கிடைக்காத அந்தஸ்தை தூக்கிக் கொடுத்துள்ளது. அதாவது 80களில் இருந்து இப்போது வரை தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் உலக நாயகன் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த படம்தான் இந்தியன்.

Also Read: பெத்த மகனுக்காக 9 வருட பகையை மறந்த தளபதி.. லைக்கா வைத்த பெரும் பலப்பரீட்சை

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பல வருடங்களாக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இதனால் உலக நாயகனும் 2019ல் கமிட்டான படம் இந்தியன் 2. தயாரிப்பு நிறுவனமான லைக்கா மற்றும் படத்தின் இயக்குனருமான ஷங்கருடன் ஏற்பட்ட பிரச்சனை, அதன்பின் கமல்- லைக்கா பிரச்சினை போன்றவற்றால் இந்த படம் தள்ளிப்போனது.

பின்பு கொரோனா பரவல், படப்பிடிப்பில் விபத்து போன்ற சம்பவங்களால் படம் இழுத்து அடித்துக் கொண்டே போனது. இதற்கிடையில் கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் தயாரிப்பில் உலக நாயகன் நடித்த படம் விக்ரம்.

Also Read: ஆடியோ லான்ச் வேண்டவே வேண்டாம்.. நியாயமாய் விஜய் கூறும் 5 விஷயங்களால் லோகேஷ்க்கு செக்

லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் வசூலில் பட்டையை கிளப்பி சுமார் 480 கோடியை அசால்ட் ஆக வாரி குவித்தது. இதனால் கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் இருந்தே கமலுக்கு 150 கோடிகள் சம்பளம் என நிர்ணயிக்கப்பட்டது.

இப்பொழுது கமல் இந்தியன் 2-க்கு 30 கோடிகள் வாங்க மறுக்கிறார். கமலுக்கு விக்ரம் படத்தால் அந்தஸ்து உயர்ந்தது. இப்பொழுது இந்தியன் 2-க்கு 150 கோடிகள் வரை கேட்கிறார். ஆனால் படம் ஒப்பந்தமான போது பேசிய சம்பளத்தை விட ஐந்து மடங்கு உயர்த்தி கேட்பதால் லைக்கா என்ன செய்வது என்று தெரியாமல் திணறுகிறது.

Also Read: பத்தி எறிய போகும் பிக் பாஸ் வீடு.. டிஆர்பிக்காக முரட்டு வில்லனை தூக்கிய விஜய் டிவி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்