திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

பட்ஜெட்டை முடிவு செய்த கமல்.. முழுசா முடி வளர்த்த சிம்புவுக்கு காட்டிய க்ரீன் சிக்னல்

Kamal – Simbu:  நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் ரிலீசான படம் பத்து தலை. இந்த படத்திற்கு பிறகு அவருடைய 48வது படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க, உலக நாயகன் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க இருப்பதாக அப்டேட் வெளியானது. அப்டேட் வெளியான கையோடு சிம்புவும் வெளிநாடு சென்றுவிட்டார்.

சிம்பு வெளிநாடு சென்று ஓய்வு எடுக்கிறார், படத்திற்கான பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் என அவ்வப்போது செய்திகள் வெளியானது. இருந்தாலும் படப்பிடிப்பு ஏன் இன்னும் தொடங்கவில்லை என்று ரசிகர்களுக்கு மிகப்பெரிய கேள்வியாகவே இருந்தது. ஒருவேளை கொரோனா குமார் பட பிரச்சினையால் இந்த படம் டிராப் ஆகிவிடுமோ என்று சிம்பு ரசிகர்களுக்கு ஒரு பயமும் இருந்தது.

Also Read:இந்தியன்-2 படத்திற்கு முன்பே வெறியோடு வெளிவரும் கங்குவா.. பாகுபலி, கேஜிஎஃப் படத்திற்கு பின் இணைந்த பிரம்மாண்ட கூட்டணி

அதற்கு ஏற்றது போல் சமீபத்தில் நடிகர் சிம்புவுக்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து ரெட் கார்டு கொடுக்கப்பட இருப்பதாக கூட சொல்லப்பட்டது. இப்போதுதான் சிம்பு தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாக ஆட ஆரம்பித்தார், அதற்குள் இப்படி ஆகிவிட்டதே என சிம்பு ரசிகர்கள் பயங்கர குழப்பத்தில் இருந்தார்கள். இப்போது இந்த குழப்பத்திற்கு எல்லாம் விடை கிடைத்து விட்டது.

STR 48 படத்திற்கு தயாரிப்பாளராக உலக நாயகன் கமலஹாசன் கிரீன் சிக்னல் கொடுத்து விட்டார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு வரும் நவம்பர் 10ஆம் தேதி தொடங்க இருக்கிறது. மேலும் படத்திற்கான பட்ஜெட்டையும் பேசி முடிவெடுத்து இருக்கிறது. நடிகர் சிம்புவின் சம்பளத்துடன் சேர்த்து 70 கோடியாக தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

Also Read:இந்த ரெண்டு படங்களின் காப்பி தான் இந்தியன்.. அட்லியைத் தொடர்ந்து ஷங்கருக்கும் கிடைத்த அவப்பெயர்

இந்த படத்திற்காக நடிகர் சிம்பு நீளமாக முடி வளர்க்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும். அவருடைய நியூ லுக் போட்டோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது. எந்த மாதிரி கேரக்டருக்காக சிம்பு முடி வளர்க்கிறார் என்ற கேள்வி எல்லோருக்குமே இருந்தது. இந்த படம் வரலாற்று கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்படுகிறதாம். அதற்காகத்தான் இந்த ஹேர் ஸ்டைல்.

இதனால்தான் கமல் மற்றும் மணிரத்தினம் படத்தில் சிம்பு நடிக்க இருந்ததும் முடியாமல் போனது. அந்த குறையை தீர்ப்பதற்காகத்தான் படத்தின் தயாரிப்பாளர் கமலஹாசன் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிக்க இருக்கிறார். தேசிங்கு பெரியசாமி அறிமுக இயக்குனராக இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதனால் அவர் இயக்கும் அடுத்த படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

Also Read:பிக் பாஸில் ஏழரை கூட்ட 7 போட்டியாளர்கள்.. ஆளே கிடைக்காததால் கோமாளியை தூக்கி விஜய் டிவி

- Advertisement -

Trending News