இந்த ரெண்டு படங்களின் காப்பி தான் இந்தியன்.. அட்லியைத் தொடர்ந்து ஷங்கருக்கும் கிடைத்த அவப்பெயர்

Director Shankar: கால் வைக்கிற இடமெல்லாம் கன்னிவெடியாக இருக்கே! என்பதுதான் இப்போது ஷங்கரின் மைண்ட் வாய்ஸ் ஆக இருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஏகப்பட்ட பிரச்சனைகளின் மத்தியில் தற்போது ஷூட்டிங் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

மே ஒன்றாம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய பட குழு முடிவு எடுத்துள்ளது. இந்நிலையில் இந்தியன் 2 படம் இந்த இரண்டு படங்களின் காப்பி தான் என்பது தெரிய வந்துள்ளது. சிவாஜி நடிப்பில் வெளியான தங்கப்பதக்கம் மற்றும் சத்யராஜின் வால்டர் வெற்றிவேல் போன்ற இரண்டு படங்களை காப்பியடித்து தான் ஷங்கர் இந்தியன் 2 படத்தை எடுத்திருக்கிறார்.

Also Read: விஜய் நிராகரித்ததால் ஷாருக்கான் எடுத்த அதிரடி முடிவு.. தளபதி போல் இயக்குனரை கழட்டிவிட்ட சம்பவம்

இதையெல்லாம் முன்பு அட்லி தான் செய்வார். ஏனென்றால் அவருடைய படங்கள் அனைத்தையும் வேறொரு படத்தை அப்படியே அட்ட காப்பி அடித்து எடுப்பதால் அவர் ‘காப்பி இயக்குனர்’ என்று பெயர் எடுத்தவர். காரணம் அவருடைய முதல் படமான ராஜா ராணி படமே மௌன ராகம் படத்தின் காப்பி தான்.

இதனால் காப்பி டைரக்டர் என பெயர் வாங்கி விட்டார். ஆனால் அந்த இமேஜை உடைக்க எவ்வளவோ போராடிக் கொண்டிருக்கிறார். அப்படியும் அவரால் அதை மாற்ற முடியவில்லை. இப்போது ஷங்கரே இரண்டு படங்களை காப்பியடித்து தான் இந்தியன் 2 படத்தை எடுத்திருப்பது பலரையும் வியக்க வைத்துள்ளது.

Also Read: அட்லிக்கு குரு உச்சத்துல இருக்காரு.. 4 வருஷம் பட்ட கஷ்டம், மிரள வைக்கும் ஜவான் மொத்த கலெக்சன்

அது மட்டுமல்ல சமீபத்தில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் வெளியான ஜவான் படமே 20 படங்களின் காப்பி என்கின்றார்கள். இருப்பினும் அந்த படம் வசூலில் தாறுமாறாக சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இப்போது அட்லியை தொடர்ந்து ஷங்கருக்கும் காப்பி இயக்குனர் என்ற அவப்பெயர் கிடைத்துவிட்டது.

மேலும் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படம் மாபெரும் ஹிட் கொடுத்ததால், அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பார்ப்பதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த சூழலில் இந்த படம் இரண்டு படங்களின் அட்டகாப்பி என்ற தகவல் பலருக்கும் பேரதிர்ச்சியாக இருக்கிறது.

Also Read: தீபிகாவை வைத்து நயன்தாராவை டம்மி பீஸ் ஆக்கிய அட்லி.. செம காண்டில் இருக்கும் லேடி சூப்பர் ஸ்டார்