பிக் பாஸில் ஏழரை கூட்ட 7 போட்டியாளர்கள்.. ஆளே கிடைக்காததால் கோமாளியை தூக்கி விஜய் டிவி

Bigg Boss Season 7: விஜய் டிவியில் அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 7 தொடங்க இருக்கிறது. ஆகையால் இப்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பெயர் இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் இதில் உறுதியான ஏழு பிரபலங்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம்.

அந்த வகையில் இப்போது உள்ள இளசுகளின் பேவரட் நடிகையாக இருந்து வருபவர் சின்னத்திரை நடிகை நிவிஷா. வில்லி கதாபாத்திரமாக இருந்தாலும் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் சமூக வலைத்தள பக்கத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அதிக ரசிகர்களை பெற்றிருக்கிறார்.

Also Read : இந்த சீசனில் விஜய் டிவி இறக்கிவிடும் வாரிசு.. மொத்த லிஸ்டையும் பார்த்தா டிஆர்பி-கே பஞ்சம் இருக்காது போலையே

இப்போது நிவிஷா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவரைத் தொடர்ந்து மலேசியா நடிகை மூன் நிலா பிக் பாஸில் கலந்து கொள்ள இருக்கிறார். இவர் திரில்லரான வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். அடுத்ததாக விஜய் டிவி தொடர்களில் கதாநாயகனாக நடித்து வந்த விஷ்ணு கலந்து கொள்ள இருக்கிறார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா தொடரில் நடித்து மிகவும் பிரபலமடைந்திருந்தார். இதைத்தொடர்ந்து இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரக்ஷிதாவின் சிபாரிசால் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அதைத்தொடர்ந்து மாடல் அழகி அனன்யா பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்.

Also Read : ரட்சிதாவின் சிபாரிசால் பிக் பாஸ்க்கு போகும் சீரியல் நடிகர்.. சாக்லேட் பாயை தூக்கிய விஜய் டிவி

இதைத்தொடர்ந்து சின்னத்திரை நடிகர் சத்யாவும் இந்த சீசனில் பங்கு பெறுகிறார். அடுத்ததாக ராஜா ராணி 2 தொடரில் மிகவும் பிரபலமான நடிகை தான் அர்ச்சனா. விஜேவாக தனது பயணத்தை தொடங்கிய இவர் அதன் பிறகு சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். கடைசியாக ஆளே கிடைக்காததால் கோமாளியையும் விஜய் டிவி தூக்கி இருக்கிறது.

அதாவது விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கு பெற்று வருபவர் தான் சரத். நகைச்சுவை தன்மை உடைய இவர் பிக் பாஸில் கலந்து கொள்ள இருக்கிறார். இவ்வாறு இந்த சீசனில் ஏழரை கூட்டுவதற்காக ஏழு போட்டியாளர்களை உறுதியாக பிக் பாஸ் இறக்கி விட இருக்கிறது.

Also Read : பிக் பாஸ் வருகையால் ஊத்தி மூடும் ரியாலிட்டி ஷோ.. டிஆர்பி இல்லாததால் விஜய் டிவி எடுத்த முடிவு