இந்தியன்-2 படத்திற்கு முன்பே வெறியோடு வெளிவரும் கங்குவா.. பாகுபலி, கேஜிஎஃப் படத்திற்கு பின் இணைந்த பிரம்மாண்ட கூட்டணி

Kanguva: 350 கோடி பட்ஜெட்டில் 3டி தொழில்நுட்பத்தில் மிகப்பிரமாண்டமாக தயாராகும் சூர்யாவின் கங்குவா, கமலஹாசனின் இந்தியன் 2 படத்திற்கு முன்பே வெறித்தனமாக வெளியாகப் போகிறது. அது மட்டுமல்ல பாகுபலி, கேஜிஎஃப் படத்திற்கு பின் இந்த படத்தில் மாஸ் கூட்டணி இணைந்துள்ளது.

கங்குவா படத்தில் இடம்பெறும் சில முக்கிய காட்சிகளை படக்குழு கொடைக்கானல் மற்றும் ராஜமுந்திரி காடுகளில் இயற்கையான ஒளிகளின் மூலம் தத்துரூபமாக படமாக்கி இருக்கின்றனர். அதிலும் படக்குழு இந்தக் காடுகளில் நடந்தே தான் சென்றுள்ளனர்.

Also Read: மனைவி பேச்சுக்கு அடிபணிந்து போகும் சூர்யா.. ஜோதிகாவால் ஏற்பட்ட மாற்றம்

எந்தவித போக்குவரத்து வசதிகளும் இல்லாதபோதும் படக்குழு பொடி நடையாகவே காட்டிற்குள் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். தினந்தோறும் சூர்யா இந்த படத்திற்காக சுமார் 2 மணி நேரம் மேக்கப்பிற்காக மட்டும் செலவழித்துள்ளார். அந்த அளவிற்கு சூர்யாவை அரக்கனாகவே இதில் காட்டி இருக்கின்றனர்.

சிறுத்தை சிவா இயக்கிக் கொண்டிருக்கும் இந்த படத்தில் ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு வித்தியாசமான பல கெட்டப்பை சூர்யா போட்டுள்ளார். இதற்கு முன்பு பாகுபலி, கேஜிஎப், புஷ்பா, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களில் பணிபுரிந்த கேமரா யூனிட் தான் கங்குவா படத்திலும் இணைந்துள்ளது.

Also Read: மூன்று வருடத்திற்கு 6 படங்களில் பிஸியாகும் சூர்யா.. கங்குவா கூட்டணியை தும்சம் செய்ய வரும் பாலிவுட்டின் பிரம்மாண்டம் படம்

தற்போது சூர்யா மற்றும் படத்தின் கதாநாயகி திஷா பதானி இருவரின் இடையே உள்ள காட்சிகள் படமாக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இதற்கான படப்பிடிப்பு கோவா, எண்ணூர், ஈவிபி ஸ்டுடியோஸ் மற்றும் கொடைக்கானல் போன்ற பகுதிகளில் நடைபெறுகிறது.

இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் நவம்பர் மாதத்தில் முடித்துவிட்டு படத்தை 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படம் மே ஒன்றாம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ரிலீஸ் ஆகப்போகிறது. ஆனால் அந்த படத்திற்கு முன்பே கங்குவா படத்தை ரிலீஸ் செய்யப் போகின்றனர்.

Also Read: பாலிவுட் பக்கம் செல்லும் சூர்யா.. 2 பாகங்களாக உருவாகும் பிரம்மாண்ட சரித்திர படம்

- Advertisement -spot_img

Trending News