வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

கமலின் உண்மை முகத்தை கிழித்தெறிந்த எக்ஸ் மனைவி.. இப்படியெல்லாமா அசிங்கபடுத்துறது

Kamal Haasan: உலக நாயகன் கமலஹாசனுக்கு, சினிமா கை கொடுத்த அளவுக்கு சொந்த வாழ்க்கை கை கொடுக்கவில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அடுத்தடுத்து விவாகரத்து, கதாநாயகிகளுடன் காதல் சர்ச்சை என அவருடைய சொந்த வாழ்க்கை கொஞ்சம் டேமேஜ் ஆன நிலையில் தான் இருக்கிறது. இன்று வரை அவருடைய காதல் கதைகள் பல மீடியாக்களுக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கிறது.

பொதுவாகவே சினிமாக்காரர்கள் இப்படித்தான் என்று சொல்லிவிட்டாலும், அவர்களிலும் சினிமா மற்றும் சொந்த வாழ்க்கையை சமமாக நடத்த கூடியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் கமலுக்கு அது என்னவோ ஆரம்பத்தில் இருந்தே சரியாக செட் ஆகவில்லை. வாணி கணபதி, சரிகா என இரண்டு பெண்களை திருமணம் செய்து விவாகரத்து செய்தார். அதன் பின்னர் கௌதமியுடன் திருமணம் செய்யாமலே வாழ்ந்து வந்தார். அந்த உறவும் முடிந்தது.

Also Read:காட்டுவாசியாக மாறப்போகும் ஆண்டவர்.. 3 ஹீரோக்களை வைத்து அட்லி செய்யப் போகும் சம்பவம்

தன் முதல் மனைவியான சரிகாவுடன் ஆன விவாகரத்திற்கு பிறகு இவர்கள் இருவருமே திருமண உறவை பற்றி பேசாமல் பல காலமாக மௌனம் காத்து வந்தனர். இந்த மௌனம் ஒரு சில வருடங்களுக்கு முன்பு கலைந்தது. அதற்கு முக்கிய காரணமே உலகநாயகன் கமலஹாசன் தான். வாணியை விவாகரத்து செய்த பிறகு நான் நிதி நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டேன் என்று ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார்.

இது பற்றி மற்றொரு பேட்டியில் வாணி கணபதியிடம் கேட்கப்பட்டது. அப்போது பதிலளித்த வாணி, விவாகரத்திற்கு பிறகு நாங்கள் ஒன்றாக தங்கி இருந்த வீட்டில் நான் உபயோகப்படுத்திய பொருட்களை கூட கமலஹாசன் எடுக்க விடவில்லை. அப்படி இருக்கும் பொழுது எப்படி என்னால் அவருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கும். ஜீவனாம்சம் கொடுப்பது என்பது சட்டத்திற்குட்பட்ட விஷயம் அதை எப்படி அவர் அப்படி சொல்லலாம்.

Also Read:பட்ஜெட்டை முடிவு செய்த கமல்.. முழுசா முடி வளர்த்த சிம்புவுக்கு காட்டிய க்ரீன் சிக்னல்

கமல் எப்பொழுதுமே நாம் கேட்கும் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க மாட்டார். அவருடைய வசீகரமான முகம் மற்றும் போலி புன்னகையை வைத்து அந்த பேச்சையே மாற்றி விடுவார். இதுதான் அவருடைய வழக்கம். எங்களுடைய விவாகரத்திற்கும் அதுதான் காரணம். அவரை விவாகரத்து செய்த பிறகு அதில் இருந்து வெளிவர முடியாமல், 28 வருடங்கள் நான் கஷ்டப்பட்டேன் என வாணி சொல்லி இருக்கிறார்.

வாணியை விவாகரத்து செய்த பிறகு கமலஹாசன், தன்னுடன் இந்தி படத்தில் நடித்த சரிகாவை காதலித்தார். திருமணம் செய்து கொள்ளாமலே இருவரும் வாழ்ந்து வந்த நிலையில், மகள் ஸ்ருதிஹாசன் பிறந்த பிறகு திருமணம் செய்து கொண்டனர். கமலுக்கு இந்த உறவும் நீடிக்கவில்லை. நடிகை ஒருவருடனான திருமணத்தை மீறிய பந்தத்தில் கமல் இருந்ததால், சரிகா அவரை விவாகரத்து செய்தார்.

Also Read:இந்த ரெண்டு படங்களின் காப்பி தான் இந்தியன்.. அட்லியைத் தொடர்ந்து ஷங்கருக்கும் கிடைத்த அவப்பெயர்

- Advertisement -

Trending News